எப்பொழுதுமே திறமை உள்ளவர்களை மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்வார் கமலஹாசன். ஒரு காலத்தில் கர்வமும், கவசமும் தான் என்னுடைய ஆயுதம் என மேடையிலேயே உரைத்துக் கூறும் கமலஹாசன் இன்று அதை எல்லாம் விட்டுக் கொடுத்துள்ளார். அவர் நடித்த தக்லைஃப் படம் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தின் பிரமோஷன் விழாவிற்காக கமலஹாசன், மணிரத்தினம் மற்றும் சிம்பு மூவரும் இணைந்து பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அங்கே கமல் பேசியது தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
எப்பொழுதுமே கமல் தன்னை எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார். ஆனால் இந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கமல், தான் டம்மி என்றும் சிம்பு தான் இந்த படத்தின் ஹீரோ என்றும் கூறி வருகிறார். சிம்புவும் மணிரத்தினமும் தான் இந்த படத்தின் தூண் என பல இடங்களில் பேசி வருகிறார்.
அதுமட்டுமின்றி தன்னைவிட இந்த படத்தில் அபிராமி, ஜோ ஜூ ஜார்ஜ், சிம்பு போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும். தன்னை மீறி அதிக அளவில் ஸ்கோர் பண்ணியதாகவும் கூறி வருகிறார். கமல் இப்படி பேசக்கூடியவர் இல்லை சினிமாவில் மிகவும் கர்வமான நடிகர்களில் ஒருவர்தான் கமல்.
அப்பேர்ப்பட்ட கமலும் இன்று இப்படி மாறுவதற்கு காரணம் அவர் சந்தித்த தோல்விகள் தான். இந்தியன் 2 படம் அவருக்கு நிறைய தோல்வியை கற்றுக் கொடுத்துள்ளது. அதனால் இப்பொழுது தக்லைஃப் படம் வெற்றி அடைவதற்கு பல தில்லாலங்கடி வேலைகள் செய்து வருகிறார். பட ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் இது என் படம் இல்லை என சக நடிகர்களை போற்றி வருகிறார்.