Kamal : கமல் குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். ஆனாலும் வசூல் வேட்டையில் அதிகம் அவரது படங்கள் இடம்பெறாது. காரணம் படம் வெளியான பல ஆண்டுகளுக்கு பிறகு தான் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
இப்படி இருக்கும் சூழலில் கமலின் கேரியரில் அதிக வசூல் செய்த முதல் 10 படங்களை இந்த பதிவில் பார்க்கலாம். கமல் நடிப்பில் வெளியான தூங்காவனம் படம் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த படம் 40 கோடி வசூலை பெற்றிருக்கிறது.
அடுத்ததாக கமலின் ஆல் டைம் ஃபேவரைட் படம் தான் வசூல்ராஜா எம்பிபிஎஸ். இந்த படம் கிட்டதட்ட 45 கோடி வசூலை பெற்றது. இதைத்தொடர்ந்து கமலின் இயக்கத்தில் வெளியானது விஸ்வரூபம் 2 படம். இப்படம் 50 கோடி வசூலை பெற்றிருந்தது.
அதிக வசூல் செய்த கமலின் பத்து படங்கள்
கமலின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது வேட்டையாடு விளையாடு. இந்தப் படம் 55 கோடி வசூல் செய்து ஏழாவது இடத்தில் இருக்கிறது. வித்யாசமான கதைகளத்தால் மிகப்பெரிய வெற்றி அடைந்தது பாபநாசம் படம். இந்த படம் 60 கோடி வசூலை குவித்தது.
கமலின் வித்தியாசமான பல கெட்டப்பில் வெளியான தசாவதாரம் படம் 102 கோடி வசூலை ஈட்டியது. இதைத்தொடர்ந்து விஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் 110 கோடி கலெக்ஷன் செய்தது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 150 கோடி வசூல் பெற்றது.
மூன்றாவது இடத்தில் கமல், லோகேஷ் கூட்டணியில் உருவான விக்ரம் படம் இருக்கிறது. இப்படம் 435 கோடி வசூலை வாரி கொடுத்தது. முதல் இடத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படம் இருக்கிறது. இந்த படத்தில் கமல் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் 1100 கோடி வசூலை குவித்தது.
இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு நடித்துள்ள தக் லைஃப் படம் வெளியாக இருக்கிறது. இந்த படம் ஆயிரம் கோடி கலெக்ஷன் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமலின் ஹிட் லிஸ்டில் முதலிடத்தை தக் லைஃப் பெறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.