Kamal-Thug Life: சர்ச்சைக்கும் கமலுக்கும் நல்ல பொருத்தம் தான். அவருடைய படம் வெளிவருகிறது என்றாலே நிச்சயம் அதில் ஏதாவது ஒரு உள்குத்து இருக்கும். அந்த வகையில் மணிரத்னத்துடன் அவர் இணையும் 234 வது படத்தின் டைட்டில் நேற்று ஆரவாரமாக வெளியானது.
தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஆண்டவர், ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற பெயரில் நடிக்கிறார். வேற லெவலில் வெளியான அந்த வீடியோ இப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் தற்போது சில சர்ச்சைகளுக்கும் அடித்தளம் போட்டு இருக்கிறது.
ஏனென்றால் தேவர்மகன் படத்தில் கமலுடைய கதாபாத்திரத்தின் பெயர் சக்திவேல். அதேபோன்று நாயகன் படத்தில் அவருடைய பெயர் வேலு நாயக்கர். இந்த இரண்டும் இணைந்து தான் இந்த பெயர் வைக்கப்பட்டிருப்பதாக இப்போது பேச்சுக்கள் எழுந்துள்ளது. அப்படி என்றால் இப்படம் இந்த இரு படங்களின் சாயலில் உருவாகுமா என்ற சந்தேகமும் இருக்கிறது.
இது ஒரு புறம் இருந்தாலும் ஜாதி பெயரை கமல் தொடர்ந்து தன் படங்களில் வைப்பது ஏன் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. அது குறிப்பிட்ட பிரிவினரிடையே ஒரு பிரச்சனையை ஏற்படுத்தும் என்று தெரிந்தாலும் அவர் இதை விடவே மாட்டாரா என்ற குரல்களும் இப்போது ஒலித்து வருகிறது. இதற்கு ஒரு வலுவான காரணமும் இருக்கிறது.
ஏனென்றால் தேவர்மகன் வந்த சமயத்தில் அந்தப் பெயரை வைத்து மிகப்பெரும் பிரளயமே வெடித்தது. அதேபோன்று சண்டியர் என்ற தலைப்பில் அவர் படம் எடுத்த போதும் பல பிரச்சினைகள் வந்தது. அதனாலயே அதை விருமாண்டி என்று அவர் மாற்றினார். இப்படி அவருடைய கதாபாத்திரத்தின் பெயர்கள் எப்போதும் பிரச்சினையாக தான் இருக்கிறது.
அந்த வகையில் தற்போது ரங்கராய சக்திவேல் நாயக்கரும் ஏதோ ஒரு வில்லங்கத்தோடு தான் உருவாகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. ஆக மொத்தம் மீண்டும் ஒரு பிரச்சனையை தூண்டிவிடும் கமல் அதை சமாளிக்கும் வழியையும் தெரிந்துதான் வைத்திருப்பார். இதுதான் இப்போது ட்விட்டர் தளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.