நடிகர் சூர்யா ஜெயபீம் திரைப்பட வெற்றிக்கு பிறகு, உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். அதன் பின்னர் இப்போது வணங்கான், வாடிவாசல் என்னும் இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு வரை அதாவது ஏழாம் அறிவு திரைப்படம் வரை சூர்யாவுக்கு தொடர்ந்து எல்லாமே ஹிட் படங்களாக அமைந்தன. சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம் என சூர்யா நடித்த படங்கள் அத்தனையும் அடுத்தடுத்து ஹிட் அடித்தன.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சூர்யாவுக்கு தியேட்டர் ரிலீஸ் படங்கள் அத்தனையுமே அட்டர் பிளாப் படங்களாகவே அமைந்துவிட்டன. சமீபத்தில் மிகப்பெரிய ஹிட் ஆன சூரரை போற்று, ஜெயபீம் படங்களும் ஒடிடி தளத்திலேயே ரிலீஸ் செய்யப்பட்டது.
நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த ஒடிடி ரிலீசுகள் வெற்றியடைந்ததால் இயக்குனர் ஷங்கர், சூர்யாவை வைத்து ஒரு படம் பண்ண திட்டமிட்டிருந்தார். அந்த படத்திற்கு ஷங்கர் 1000 கோடி பட்ஜெட் ஒதுக்கியிருந்தார். இந்த படத்தை பற்றிய ஒரு சில அப்டேட்டுகளும் அவ்வப்போது வந்தன.
பாலிவுட்டிலேயே மிகப் பிரபலமான தயாரிப்பாளர் என்றால் அது கரண் ஜோகர் தான். இவருடைய தர்மா ப்ரொடக்சனுக்கு கீழ் பல வெற்றி நாயகர்களின் வாழ்க்கையை தொடங்கி வைத்திருக்கிறார். இவர் சங்கர்-சூர்யாவின் புது ப்ராஜெக்டுக்கு நெட்டபிலிக்ஸ் இன்வெஸ்ட்மென்ட் செய்வதாக இருந்தார்.
ஆனால் சூர்யாவுக்கு கடைசி 10 வருட படங்கள் எதுவும் ஹிட் ஆகாததால், சூர்யாவை நம்பி இவ்வளவு பெரிய தொகையை இன்வெஸ்ட் பண்ண வேண்டாம் என்று சுற்றியிருப்பவர்கள் சொன்னதையடுத்து இந்த பிளானை டிராப் செய்து விட்டார் கரண் ஜோகர். இப்போது இந்த ப்ராஜெக்டை வேறு ஒரு பான் இந்தியா ஸ்டாரை வைத்து பண்ண போகிறார்கள்.