இனி தொட்டதெல்லம் மின்னும்.. மெய்யழகன் படத்தை தொடர்ந்து கார்த்திக்கு அடித்த ஜாக்பாட்

தமிழ் திரையுலகில் அப்பா பிரபல நடிகராக இருந்து அவரது வாரிசுகள் திரையுலகில் அறிமுகமாகிறார்கள் என்றால் அவர்கள் மீது பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கபடும்.  அவரை அவர் தந்தையுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள். 

அப்பா சிவக்குமார் பிரபல நடிகர் என்பதாலேயே சூர்யா முதல் படத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தார்.  ஆனால் கார்த்தியின் கதை வேறு.  எம்.பி.ஏ அமெரிக்காவில் படித்து முடித்து இந்தியா வந்த பின், பருத்தி வீரன் படத்தில் முரட்டு கிராமத்தானாக நடித்திருப்பார். 

கார்த்தி, இயக்குநர் மணிரத்னத்திடம் ‘ஆயுத எழுத்து’ என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அப்போதில் இருந்தே கார்த்திக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் கார்த்தியின் ஆசையோ இயக்குநராக வேண்டும் என்பதே.  இப்படி இருக்க, பருத்திவீரன் இவர் நடிப்பை பார்த்து இவர் ஒரு ஆக்ட்டிங் மெட்டீரியல் என்று முடிவு செய்த இயக்குனர்கள் தொடர்ந்து கார்த்தியை வைத்து படம் பண்ண ஆரம்பித்தார்கள்.

அப்படி இருக்கும் வேளையில், இவருக்கு ஒரு திருப்புமுனையாக பையா சிறுத்தை போன்ற படங்கள் அமைந்தது.  இப்படி தொடர்ந்து பல வெற்றி படங்களை கொண்டிருக்கும் வேளையில் தான் ஜப்பான் படம் இவரது மார்க்கெட்டை அப்படியே சரித்தது..

மீட்டு கொடுத்த மெய்யழகன்

இந்த சூழ்நிலையில் இவருக்கு மறுபடியும் மார்க்கெட்டை உயர்த்தி கொடுத்தது மெய்யழகன் படம்.  இந்த நிலையில் இவர் அடுத்ததாக மாரி செல்வராஜுடன் கூட்டணி போட போகிறார்.  மாரி செல்வராஜ் தற்போது,  துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து இவரது அடுத்த படம் பற்றி ரசிகர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தான் ஒரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது.

மாரி செல்வராஜ் அடுத்ததாக கார்த்தியை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது மாரி செல்வராஜின் தந்தையுடைய வாழ்க்கை கதை என்பதை பிரின்ஸ் பிச்சர்ஸ் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.  இது ரசிகர்களின் மத்தியில் இப்போதே ஒரு ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெறும் குட்டி பசங்களை வைத்து எடுத்த வாழை படமே வசூலிலும் விமர்சனத்திலும் சக்கை போடு போட்டது.  அப்படி இருக்கும்போது, இந்த கூட்டணியே படத்தின் ஒரு பெரிய பிளஸ் ஆக தான் உள்ளது. 

Leave a Comment