25 படங்கள் நடித்தும் கார்த்திக்கு குறையாத குசும்பு.. கூடவே தொத்திக்கிட்ட அடைமொழி

Actor Karthi: வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆன நடிகர் கார்த்தி தன்னுடைய முதல் படமான பருத்திவீரன் படத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால் அதன் தொடர்ச்சியாக வெளியான எந்த படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

இவரை விட இவருடைய அண்ணன் சூர்யா அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார். ரசிகர்களின் மத்தியில் நடிப்பு அரக்கனாகவே பார்க்கப்படும் சூர்யா, இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் தன்னுடைய அசுரத்தனமான நடிப்பை வெளிக்காட்டுகிறார்.

ஆனால் கார்த்தி தெரிந்தே படங்கள் ஓடவில்லை என்று தொடர்ந்து அதே பாணியில் படங்களை நடித்து மொக்கை வாங்குகிறார். அதிலும் தேவ், அலெக்ஸ்பாண்டியன் போன்ற படங்கள் நல்லா இல்ல என்று இயக்குனரிடம் அவரே சொல்லி இருக்கிறார். இருந்தாலும் நடித்து மொக்கை வாங்கினார்.

Also Read: அதல பாதாளத்திற்கு சென்ற கார்த்தி.. அந்தப் பட லிஸ்டில் இணைந்த ஜப்பான்

குசும்பு மட்டும் குறையாத கார்த்தி

இப்படியே தட்டு தடுமாறி ஒரு வழியா 25 படங்கள் நடித்து விட்டார். கார்த்தியின் 25வது படமான ஜப்பான் தீபாவளியை முன்னிட்டு சமீபத்தில் ரிலீஸ் ஆனது. ஆனால் அதே சமயத்தில் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியாகி ஜப்பானை ஓரம் கட்டியது.

இருந்தாலும் கார்த்திக்கு இப்பொழுது ‘கோல்டன் ஸ்டார்’ என்ற அடைமொழி கிடைத்திருக்கிறது. தற்போது அவருடைய பெயர் ‘கோல்டன் ஸ்டார் கார்த்தி’ தான். தொடர் தோல்விகளை சந்தித்தாலும் இன்னமும் கார்த்தியின் குசும்பு மட்டும் குறையாமல் அடுத்தடுத்த படங்களில் தொடர்கிறது.

Also Read: சூர்யா கூட்டணியில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் பாலிவுட் படம்.. ஆனா ஹீரோ நம்ம ரொலெக்ஸ் இல்லையாம்