Kavin Upcoming Movies: திறமை இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஏற்ப கவின் தற்போது அசுர வளர்ச்சியை அடைந்து வருகிறார். அந்த வகையில் இதுவரை இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோவாக மாறிவிட்டார். அதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து கொண்டே வருகிறது.
அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்த டாடா படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது கிட்டத்தட்ட நான்கு படங்களில் கமிட் ஆயிருக்கிறார். அதுவும் சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் ஆகியது. அந்த சூழ்நிலையிலும் புது மாப்பிள்ளை ஆக படத்தில் பிசியாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.
அதில் முதலாவது ஏலன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இந்த இயக்குனர் ஏற்கனவே பியார் பிரேம காதல் படத்தை எடுத்திருக்கிறார். இப்படம் ஹரிஷ் கல்யாண்-க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அந்த வகையில் கவினுக்கும் முக்கிய திருப்புமுனையாக அமையப் போகிறது. மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போகிறார்.
இதனைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்கிற படத்தில் கவின் நடிக்கப் போகிறார். இதுவரை டான்ஸ் மாஸ்டராக வந்த சதீஷ் முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்த படத்தில் கவின் நடிக்கப் போகிறார் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் இந்த படத்தின் மீது ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கப் போகிறார்.
அடுத்ததாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கப் போகும் முதல் படத்தில் நடிக்கப் போவது கவின் தான். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கப் போகிறது. கண்டிப்பாக இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அடுத்ததாக இந்த படங்களை எல்லாம் முடித்த பின்பு விஜய் மற்றும் ரஜினியின் இயக்குனருடன் கூட்டணி வைக்கப் போகிறார்.
அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நெல்சன் தான். இவர் இயக்கத்தில் தான் அடுத்து கவின் கமிட் ஆகி இருக்கிறார். ஏற்கனவே இவர்களுடைய பிரண்ட்ஷிப் ஆப் ஸ்கிரீனில் பார்க்கவே நன்றாக இருந்தது. அந்த வகையில் இவர்களுடைய காம்பினேஷன் படத்தில் பட்டைய கிளப்ப போகிறது. இப்படி தொடர்ந்து பல வாய்ப்புகளை பெற்று ஜொலித்து கொண்டு வருகிறார்.