40-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய குந்தவை.. இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படங்கள்

மணிரத்தினம் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் மிக பெரிய வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் இவர் குந்தவையாக நடித்து பல பேர் மனதில் நிஜமான குந்தவை இவர்தான் என்று தோன்றும் அளவிற்கு கேரக்டருக்கு ஏற்றபடி தத்ரூபமாக நடித்திருப்பார்.

அத்துடன் இப்படத்தின் வெற்றி விழா, பிரமோஷன், ஆடியோ லான்ச் போன்ற எல்லா நிகழ்ச்சிக்கும் வந்ததை பார்த்த அவருடைய ரசிகர்கள் இன்னும் பேரழகியாக இருக்கிறார் என்று வச்ச கண்ணு வாங்காமல் பார்த்து ரசித்து வந்தார்கள். இப்படி சொன்னா கரெக்டா இவருக்கு பொருத்தமாக இருக்கும். வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மட்டும் இன்னும் குறையவே இல்லை.

அப்படி என்ன த்ரிஷாவுக்கு வயசு ஆகிட்டு 40 தான் ஆகுது. இன்று இவரது 40வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அவரது ரசிகர்களின் வாழ்த்துக்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ என அனைத்தையும் சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இவர் பிறந்தநாளுக்கு நான்கு கேக் வெட்டி மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிற போட்டோவை வெளியிட்டு வருகிறார். அதில் ஒரு கேக்கில் குந்தவை போட்டோவை வைத்து அதை கட் பண்ற புகைப்படத்தை இணைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் த்ரிஷா கருப்பு கலர் டிரஸ் போட்டு மிகவும் பளிச்சென்று மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

அத்துடன் இவர் லோகேஷ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் லியோ படத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவரது பயணங்கள் இனிதாக மேன்மேலும் வெற்றியுடன் இருக்க வேண்டும் என்று அவர்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த பிறந்தநாளுக்கு பிறகு கூடிய சீக்கிரத்தில் இவருடைய திருமண விஷயத்தைப் பற்றி சொல்வார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். அத்துடன் இவருடைய அடுத்த பிறந்தநாள் அன்று இவர் திருமண கையோட புது மாப்பிள்ளையுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடுவார் என்று அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

த்ரிஷாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

trisha-cinemapettai
trisha -cinemapettai
trisha-cinemapettai