25 லட்ச ரூபாய்க்கு கொக்கி போட்ட லலித்.. கரும்பு திங்க கூலி எதற்கு என பட்டறையை போட்ட தனுஷ்

பிரபல தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளர் எஸ் எஸ் லலித் குமார் ஏற்கனவே எச். வினோத்தை வைத்து ஒரு படம் இயக்குவதாக திட்டம் தீட்டி வந்துள்ளார். அதற்கான ஒப்பந்தமும் ஏற்கனவே வெளியானது. இதற்காக ஏற்கனவே விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்பொழுது விஜய் சேதுபதி எச்.வினோத் படத்திலிருந்து விலகியுள்ளார். இந்த படம் பண்ணுவதற்கு லலித் ஏற்கனவே 25 லட்ச ரூபாய் வினோத்திற்கு அட்வான்ஸாக கொடுத்துள்ளார். இப்பொழுது இந்த படத்தில் விஜய் சேதுபதி பிஸியாக உள்ள காரணத்தால் நடிக்க முடியாமல் போனது.

ஆகவே இந்த படத்தில் எச். வினோத் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷ் இப்பொழுது கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார். இந்த படம் 1930-40களில் நடக்கும் கதையாக ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில் தனுசுடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

அவர்களுடன் இப்படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இணைந்து நடிக்கிறார். ஏற்கனவே கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முடிந்துவிட்டது. தற்போது டிசம்பர் மாதத்தில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது.

இந்த படத்திற்குப் பிறகு தெலுங்கு ப்ரொட்யூசர் படம் பண்ண இருக்கிறார், மதுரை அன்புச் செழியன்க்கு ஒரு படம் பண்ணுகிறார். சன் பிக்சர்ஸ் ஒரு படம் பண்ணுகிறார். இப்படி பிசியாக இருக்கும் தனுஷ் கமிட்டான இந்த படங்களை எல்லாம் வரிசையாக முடித்துக் கொடுத்துவிட்டு எச்.வினோத்-லலித் கூட்டணியில் உருவாகும் படத்திலும் நடிக்க உள்ளார்.

இப்படி விஜய் சேதுபதி ஜெர்க் அடித்ததும் அவருக்கு பதில் தனுஷை கமிட் செய்து லலித் நாசுக்காக காய் நகர்த்தி இருக்கிறது. இதற்கு தனுஷும் கருப்பு தின்ன கூலி எதற்கு என அந்தப் படத்தில் நடிப்பதற்கு முழு மனதுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். எனவே இந்த படத்தின் தனுஷ் உடன் யார் யார் நடிக்கின்றனர் என்பதற்கான முழு விவரமும் சீக்கிரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.