மொக்க படத்தின் 2ம் பாகத்திற்கு சண்டை போடும் லிங்குசாமி.. ஆர்யா வேண்டாம் அந்த ஹீரோ தான் வேணுமாம்

இயக்குனராக பல வெற்றிகளை பெற்ற லிங்குசாமி தயாரிப்பாளரான பிறகு ஏகப்பட்ட பிரச்சனையில் மாட்டிக் கொண்டார். அதிலும் மொக்க படத்தை எடுத்து படு தோல்வியை சந்தித்த பிறகும், அதன் இரண்டாம் பாகத்திற்கு சண்டை போடுவது வேடிக்கையாக இருக்கிறது.

கடந்த 2010 ஆண்டு லிங்குசாமி எழுதி இயக்கி தயாரித்த பையா படத்தில் கார்த்தி கதாநாயகனாகவும், தமன்னா கதாநாயகியாகவும் இணைந்து நடித்தனர். இந்த படம் கார்த்திக் நல்ல பெயரை பெற்று தந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளரான லிங்குசாமிக்கு இந்த படம் எதிர்பார்த்த அளவு கை கொடுக்கவில்லை.

இதனால் லிங்குசாமி மிக மோசமான பண பிரச்சனையில் சிக்கியுள்ளார். இதிலிருந்து வெளிவர யாரும் எந்த ஹீரோக்களும் உதவி செய்யவில்லை. இதனால் தான் சொந்தப்படமான பையா 2-வை மீண்டும் எடுக்கலாம் என முடிவெடுத்து, அதில் ஆர்யாவை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்த படத்தின் உரிமை கிரீன் ஸ்டூடியோ ஞானவேல் ராஜாவிடம் இருக்கிறது. காரணம் ரஜினி முருகன் படத்தில் உதவி செய்ததால் இதை லிங்குசாமி அவரிடம் கொடுத்துவிட்டார். அதனால் இந்த படத்தை நானே எடுக்கிறேன், தயாரிப்பை நானே பார்த்துக்கொள்கிறேன். ஆனால் ஆர்யா ஹீரோவாக நடிக்க கூடாது. கார்த்தியை நடிக்க வையுங்கள் என்று சொல்லி உள்ளார்.

அதனால் மீண்டும் கார்த்தி உடன் பையா 2 ஆரம்பிக்கப் போகிறது, அதேசமயம் ஆர்யாவை கழட்டி விட்டனர். கடைசியாக ஆர்யா, முத்தையா இயக்கத்தில் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்து மோசமான விமர்சனத்தை பெற்றார். ஆனால் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் ஆக நடித்து மேலும் தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொண்டார்.

அது மட்டுமல்ல பையா படத்தை கார்த்தியை வைத்து தான் எடுத்ததால் மறுபடியும் அவரை வைத்தே தான் இரண்டாம் பாகத்தையும் தொடர லிங்குசாமி அடம் பிடிக்கிறார். மொக்க படத்திற்கு இவ்வளவு பில்டப் தேவையில்லை என்று ஆர்யாவும் தன்னை கழட்டிவிட்டதை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.