புரியாத புதிராக லோகேஷ் அளித்த ஷாக்கிங் பதில்..தளபதி 67 இல் விக்ரம் இருக்காரா?

விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படம் பெரிய அளவில் வசூலில் வேட்டையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு லோகேஷ் இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதே போல் லோகேஷின் விக்ரம் படமும் எதிர்பார்த்த அளவைவிட பெரிய வெற்றியை கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தில் த்ரிஷா,சஞ்சய் தத்,கௌதம் மேனன்,மன்சூர் அலிகான்,அர்ஜூன் மற்றும் மிஷ்கின் போன்ற மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தில் விக்ரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி வந்தது.

மேலும் இதைப்பற்றி லோகேஷிடம் கேட்டபோது இதற்கு தற்பொழுது இவர் ஒரு புரியாத புதிராக பதில் அளித்துள்ளார். சியான் விக்ரம் இந்த படத்தில் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டோம் என்று சொன்னதற்கு அதற்கு லோகேஷ் ஆமாம் நானும் கேள்விப்பட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

இது உண்மையா என்று கேட்டதற்கு கொஞ்ச நாள்ல தெரிஞ்சிரும் இப்பவே சொல்லிட்டா சர்ப்ரைஸ் இருக்காது என்று பதில் அளித்திருக்கிறார். இவரின் இந்த மாதிரியான பதில் லோகேஷ் 67 படத்தில் விக்ரம் நடிக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே விக்ரம் படத்தில் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யாவை கொண்டு வந்தது பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. அதேபோலவே இப்பொழுது தளபதி 67 படத்திலும் சியான் விக்ரம் கதாபாத்திரமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தளபதி 67 படத்திற்கு லோகேஷ் தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். அதாவது இந்த படத்திற்கான அப்டேட் பிப்ரவரி 1,2,3 இல் ரிலீஸ் ஆகும் என்று அறிவிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் இந்த படம் ஒரு அதிரடியான படமாகவும் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.