சொதப்பிய நெல்சன், சம்பவம் செய்ய போகும் லோகேஷ்.. லியோவில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Actor Vijay: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ திரைப்படம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை முன் வைக்கின்றது. படம் பூஜை போட்ட நாளிலிருந்து இப்போது வரை பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் இந்நிலையில் சமீபத்தில் இதன் முதல் பாடலான நா ரெடி வெளியாகி சில சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது.

ஆனாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மட்டும் இன்னும் குறைவதாக இல்லை. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற அபிஷேக் ராஜா தற்போது லியோ படத்தில் இருக்கும் சர்ப்ரைஸ் ஒன்றை வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார்.

ஏற்கனவே இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அதிரிபுதிரியாக இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் அப்படி ஒன்று படத்தில் இல்லவே இல்லை. அது பற்றி கூறியிருக்கும் அபிஷேக் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் அந்த காட்சி மாற்றப்பட்டது.

ஆனால் அதற்கு முன்பாகவே நெல்சன் அட்டகாசமான ஒரு சண்டைக் காட்சியை எடுத்திருந்தார். ரிலீஸ் தேதி நெருங்கிய காரணத்தினால் தான் சில சொதப்பல்கள் நடந்தது. ஆனால் இந்த முறை லியோவில் அப்படி நடக்க வாய்ப்பே கிடையாது.

அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு சண்டைக்காட்சி நிச்சயம் ரசிகர்களை சுண்டி இழுக்கும். அதிலும் ஆடியன்ஸ் திறந்த வாயை மூடாமல் அந்த காட்சியை பார்ப்பார்கள் என்று ஏகப்பட்ட பில்டப் கொடுத்திருக்கிறார். இது ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் லோகேஷ் ஏற்கனவே சண்டைக் காட்சிகளை தாறுமாறாக தெறிக்காக விடுவார். அதிலும் இப்படம் விஜய்க்கு முக்கியமான படம் என்று கூறப்பட்டு வரும் அந்நிலையில் தரமான சம்பவத்தை அவர் செய்யப் போகிறார் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த சர்ப்ரைஸுக்காகவே ரசிகர்கள் இப்போது காத்துக் கொண்டிருக்கின்றனர்.