நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ படத்தில் பணியாற்றி வருகிறார். மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து இவர்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கொடுத்த விக்ரம் படத்தின் வெற்றி, தளபதிக்கும் மற்றும் அவருடைய ரசிகர்களுக்கும் லியோ படத்தின் மீது ஒரு பெரிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது.
வரும் அக்டோபரில் ரிலீஸ் ஆக இருக்கும் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பானது சென்னையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மொத்த பட குழுவும் ஜம்மு காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்துவதற்காக சென்றனர். குளிர் காலத்தில் இவர்கள் சென்றதால் அங்கு கடுங்குளிரில் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இது குறித்து அந்த படக்குழுவே வீடியோவும் வெளியிட்டிருந்தது.
காஷ்மீரின் கடுங்குளிரில் அவதிப்பட்டு தான் லியோ படக்குழு சென்னை திரும்பியது. இதனை கருத்தில் கொண்டு தளபதி விஜய் இனி அவுட்டோர் ஷூட்டிங் வேண்டவே வேண்டாம் மொத்த காட்சிகளையும் சென்னையிலேயே செட் போட்டு எடுத்து விடுங்கள் என்று லோகேஷ் கனகராஜ் இடம் கண்டிஷன் ஆக சொல்லி இருந்தார். லோகேஷும் தளபதியின் வார்த்தைக்கு சரி என்று சொல்லி சென்னையில் படப்பிடிப்பை தொடங்கினார்.
சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போடப்பட்டு சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு காட்சிகளில் திருப்தி ஏற்படவில்லையாம். இவரைப் பொறுத்த வரைக்கும் தான் நினைத்தது போலவே காட்சிகள் அமைய வேண்டும் என்பதில் ரொம்பவும் உறுதியாக இருப்பவர். இதனால் விஜய்யிடம் சென்று தனக்கு திருப்தி இல்லை என்பதை தெரிவித்து அவுட்டோர் ஷூட்டிங் பண்ண அனுமதி கேட்டு இருக்கிறார்.
விஜய்யும் என்ன சொல்வது என்று தெரியாமல் சரி என்று ஒத்துக் கொண்டாராம். தற்போது சண்டை காட்சிகள் அத்தனையும் பையனூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது படப்பிடிப்பு அங்கே பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே குளிரில் வாட்டி வதைத்த லோகேஷ் கனகராஜ் இப்போது அடிக்கும் வெயிலில் தளபதியை போட்டு பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
விஜய்க்கு ஏற்கனவே பீஸ்ட் மற்றும் வாரிசு திரைப்படங்கள் சறுக்கலில் விட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இப்போது அவருடைய பெரிய நம்பிக்கையே லோகேஷ் கனகராஜ் தான். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இயக்குனர் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறார் தளபதி. லியோ படமும் இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி விட்டது.