கடையை இழுத்து மூட காத்திருக்கும் லோகேஷ்.. கால் சீட் கொடுக்காமல் இழுத்தடிக்கும் நடிகர்

Leo update: தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. இந்த படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டதா, படபடப்பு நடந்து கொண்டிருக்கிறதா என்று கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது.

லியோ படத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்கள் தங்களுடைய போர்ஷன் முடிந்தவுடன் சமூக வலைத்தள பக்கங்களில் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டதாக ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் தளபதி விஜய் நடிக்க வேண்டிய காட்சிகளும் முழுக்க படமாக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின. இருந்தாலும் இது பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரியாமல் இருந்தது.

Also Read:மேடையில் கெட்ட வார்த்தை பேசிய மிஷ்கின்.. தத்துவம் சொல்றேன்னு பெயரைக் கெடுத்துக் கொண்டு செய்யும் அக்கப்போரு

தற்போது நடிகர் விஜய் நடிக்க வேண்டிய பட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படம் சம்பந்தப்பட்ட பேட்ச் ஒர்க் வேலைகள் நான்கு நாட்களுக்கு பாக்கி இருப்பதாகவும், இந்த மாத இறுதியில் முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்கு பூசணிக்காய் உடைக்க இருக்கிறார்.

மேலும் ஒரே ஒரு நடிகரால் சில காட்சிகள் படமாக்கப்படாமல் இருக்கிறது எனவும், அவர் ஒத்துழைப்பு கொடுத்தால் விரைவில் படபிடிப்பு முடிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத் தான் தற்போது படப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடிப்பது. இதற்கு காரணம் அவர் கொஞ்சம் பிஸியாக இருப்பதுதானாம்.

Also Read:ஒரே வருடத்தில் அறிமுகமாகி கல்யாணத்தால் காணாமல் போன 5 நடிகைகள்.. 20 வருஷமா சொல்லியடிக்கும் திரிஷா!

சஞ்சய் தத் வரும் 28ஆம் தேதி ஒரு நாள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்துவிட்டு, இருக்கும் பேட்ச் ஒர்க் வேலைகளையும் முடித்து விட்டால், தளபதி விஜய் படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பூசணிக்காய் உடைத்து படப்பிடிப்பை முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமிருக்கும் இரண்டு மாதங்களில் படத்தின் டெக்னிக் வேலைகள் மற்றும் பிரமோஷன் வேலைகளில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிஸியாகி விடுவார்.

Also Read:லியோ படத்தின் ஒன் லயன் ஸ்டோரி இதுதான்.. கதை கசிந்ததால் கவலையில் லோகேஷ்