மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமலஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நினைத்தபடி நடக்கவில்லை. தொடர்ந்து இழுபறி நடந்துகொண்டே இருந்தது.
ஆனால் தற்போது ஊரடங்கு முடிந்தவுடன் விக்ரம் படத்தின் படப்பிடிப்புகளை தொடங்க கமலஹாசன் உத்தரவிட்டதால் லோகேஷ் கனகராஜ் வேக வேகமாக செயல்பட்டு வருகிறார். மேலும் படத்தின் டெக்னீஷியன்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறார்.
அந்த வகையில் விக்ரம் படத்தில் சண்டை பயிற்சியாளர்களாக அன்பறிவு என்ற இரட்டையர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்கள்தான் தளபதி 65 படத்திலும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு ஏன் பிரமாண்ட ஆக்ஷன் படமாக பார்க்கப்பட்ட கேஜிஎப் படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் கூட இவர்கள் தான். சும்மாவே லோகேஷ் படங்களில் சண்டைக் காட்சிகள் அனல் தெறிக்கும், இப்போது இவர்கள் வேறு இணைந்துவிட்டதால் படம் பட்டையை கிளப்பும் என இப்போதே பேச்சுகள் எழுந்துள்ளன.
படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கும் தேதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது விக்ரம் படக்குழு. முன்னதாக விக்ரம் படம் கைவிடப்பட்டதாகவும், விஜய் சேதுபதியை வைத்து இடையில் லோகேஷ் கனகராஜ் ஒரு படம் பன்ன இருந்ததாகவும் பல வதந்திகள் வெளிவந்தன.
தற்போது அதெல்லாம் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் படத்தில் அன்பறிவு மாஸ்டர்கள் இணைந்துள்ளனர் என்பதை உலக நாயகனுடன் அறிவித்துள்ளார்.
