சாதாரணமாக ஒரு இயக்குனர் வெற்றியை மட்டுமே கொடுப்பது பெரிய விஷயம் தான். அதிலும் லோகேஷை பொறுத்தவரையில் ஒவ்வொரு படத்திலும் அவருடைய வளர்ச்சியை பார்க்க பிரம்மிப்பாக உள்ளது. முதல் படத்தை காட்டிலும் அதை விட பல மடங்கு உழைப்பு அடுத்த படத்திற்கு போட்டு உள்ளார். அவ்வாறு தான் விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது.
இப்போது விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் லோகேஷின் லயன் அப்பில் எக்கச்சக்க படங்கள் உள்ளது. அந்த வகையில் தளபதி 67 படத்திற்கு பிறகு விக்ரம் 2, கைதி 2 ஆகிய படங்களை லோகேஷ் எடுக்கவிருக்கிறார். மேலும் விக்ரம் படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் பெயரை தட்டிச் சென்ற கதாபாத்திரம் ரோலக்ஸ்.
ஆகையால் சூர்யாவின் இந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முழு நீளப்படமாக லோகேஷ் எடுக்க திட்டமிட்டுள்ளார். இவ்வாறு டாப் ஹீரோக்கள் லோகேஷின் படத்தில் நடிக்க க்யூவில் நிற்கிறார்கள். இப்படி கரும்புத் தின்ன கூலி எதற்கு என்பது போல கைவசம் பல படங்கள் வைத்துள்ளார். ஆனால் ஜெயம் ரவிக்கு இப்போது லோகேஷ் ஒரு கதை சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபகாலமாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. ஆனாலும் மணிரத்தினம் படத்தில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி அசத்தி இருந்தார். இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்ததால் ஜெயம் ரவியின் கதாபாத்திரமும் பேசப்பட்டது.
ஆனால் ஜெயம் ரவி தனியாக நடித்த படங்கள் எதுவும் தற்போது வெற்றி பெறவில்லை. இப்போது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் ஜெயம் ரவி உள்ளார். ஆகையால் தற்போது உள்ள இளம் இயக்குனர்களிடம் ஜெயம் ரவி கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் லோகேஷ் தற்போது ரசிகர்களால் பேசப்படும் இயக்குனராக உள்ளார்.
ஆகையால் லோகேஷ் ஜெயம் ரவிக்கு ஒரு கதை எழுதி உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது 2, 3 வருடங்களுக்கு லோகேஷ் கைவசம் நிறைய படங்கள் உள்ளது. எனவே ஜெயம் ரவி படத்தை லோகேஷ் இயக்குவதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தியாக இருக்கக்கூடும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.