Lokesh Kanagaraj: இப்போது எங்கு திரும்பினாலும் லோகேஷ் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. விக்ரம் படத்தின் மூலம் தரமான சம்பவத்தை இறக்கிய இவர் இப்போது லியோ படத்தின் மூலம் ஒட்டுமொத்த கண்ட்ரோலையும் குத்தகைக்கு எடுத்துள்ளார்.
விஜய் நடிப்பில் கணக்கில் அடங்காத நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் இப்படம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ரிலீஸ் தேதியை பூஜை போடும்போதே அறிவித்து புத்திசாலித்தனமாக காய் நகர்த்தி வரும் லோகேஷ் லியோ மூலம் சர்வதேச அளவில் மிரட்ட இருக்கிறார்.
இவரைப் போலவே விஜய் பட இயக்குனர்களான இன்னும் இரண்டு பேர் ஒவ்வொரு மாதத்தையும் குத்தகைக்கு எடுத்து மிரட்ட இருக்கின்றனர். அதாவது பீஸ்ட் படத்திற்கு பிறகு நெல்சன் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கியுள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான காவாலா பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதை அடுத்து இன்று இரண்டாம் பாடலும் வெளிவர இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இப்படத்திற்கு வெளிநாட்டிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி ஆகஸ்ட் மாதம் மிகப்பெரும் சம்பவத்தை செய்ய நெல்சன் தயாராகி விட்டார்.
அதற்கு அடுத்தபடியாக அட்லி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்தி ஜவான் படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி மிரள வைத்தது. அதை தொடர்ந்து ட்ரைலருக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் வரும் செப்டம்பர் மாதம் ஜவான் பட திருவிழாவாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் பாலிவுட்டில் இப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையாடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இப்படி இந்த மூன்று விஜய் பட இயக்குனர்களும் அடுத்தடுத்த மாதங்களை குத்தகைக்கு எடுத்து சம்பவத்திற்கு தயாராகி இருக்கின்றனர். அதில் லோகேஷ் தான் சர்வதேச அளவில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.