அடுத்து விஜய்க்கு வில்லனாக சங்கத்து ஆள இறக்கும் லோகேஷ்.. தளபதி 67 பட மாஸ் அப்டேட்

தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம் இன்னும் சில தினங்களில் முழுமையாக நிறைவடைய உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தை தொடங்க உள்ளார்.

கமலஹாசனின் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜயை இயக்குவதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் தளபதி 67 படத்தில் நடிகர் சங்கத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய ஆள இறக்க உள்ளார் லோகேஷ்.

முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் தளபதி 67 படத்தின் வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முதலில் பிரித்திவிராஜ் தேர்வான நிலையில், இப்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சங்க தலைவரான விஷால் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

தற்போது விஷால் லத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தும் படத்தை வெளியிட முடியாமல் படக்குழு தவித்து வருகிறது. இந்நிலையில் விஷால் நடிகர் சங்க கட்டிடம் முடிந்த பிறகு தான் தனக்கு திருமணம் நடக்கும் என அறிவித்தார். ஆனால் கட்டிடமும் கட்டி முடிந்த பாடில்லை, இவருக்கும் திருமணம் ஆகவில்லை. சினிமாவிலும் பல அடிகளை வாங்கிக் கொண்டிருக்கும் விஷாலுக்கு தளபதி 67 படம் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

எனவே லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் விஷால் இணையும் புதுவிதமான காம்போ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது. முன்பு கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் பல பிரபலங்களை இறக்கிவிட்டு மாஸ் காட்டிய லோகேஷ் தளபதி 67 படத்திற்கும் பக்கா பிளான் போட்டு வைத்திருப்பதாக தெரிகிறது.

விஷால் மட்டும் இதற்கு சம்மதம் தெரிவித்தால் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு விஜய் சேதுபதி வில்லனாக நடித்து மார்க்கெட்டை எகிற விட்டது போல் தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால் நடித்து மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை எட்டிப் பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.