விடாமுயற்சி எல்லாம் எனக்கு செகண்ட் ஆப்ஷன் தான்.. பாதி இலங்கையை வாங்கிய சுபாஸ்கரன்

Lyca Subaskaran: லைக்கா நிறுவனம் இப்போது தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கால் பதித்துள்ளது. அதாவது ஆரம்பத்தில் லைக்கா வருவதற்கு பல தடைகள் வந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக சுபாஸ்கரன் தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். அதன்படி அவரது தயாரிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படம் நல்ல வசூலை பெற்றது.

இதைத்தொடர்ந்து சந்திரமுகி 2 மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களையும் தயாரித்து உள்ளார். இப்போது ரஜினியின் தலைவர் 170 படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. ஆனால் பல மாதங்கள் முன்பே அஜித்தின் விடாமுயற்சி படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக ஒப்பந்தம் போட்டது. ஆனால் நீதி பிரச்சனையால் இப்போது வரை படப்பிடிப்பு தொடங்கவில்லை எனக் கூறப்பட்டது.

ஆனால் இப்போது லைக்காவுக்கு விடாமுயற்சி எல்லாம் செகண்ட் ஆப்ஷன் தானாம். அதாவது லைக்கா நிறுவனம் தனது முதலீடை பெரிய நிறுவனங்களில் போட்டு வருகிறார்கள். அதுவும் லைக்கா நிறுவனம் போட்டிருக்கும் திட்டத்தை பார்த்தால் அடுத்த அம்பானிக்கு போட்டியாக இவர்கள் தான் வருகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

அதாவது லைக்கா நிறுவனம் இலங்கையில் இரண்டு அரசாங்க சேனலை வாங்கிவிட்டார்களாம். ரூபவாகினி, சுவர்ணவாகினி என்று இரண்டு சேனல்கள் இப்பொழுது இவர் கையில் உள்ளது. வெள்ளித்திரை காட்டிலும் இப்போது சின்னத்திரையில் நல்ல லாபம் பார்க்க முடிகிறது.

தமிழ் பொறுத்தவரையில் சன் டிவி, விஜய் டிவி போன்ற பெரிய நிறுவனங்கள் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால் இலங்கையில் முக்கிய தொலைக்காட்சிகளை லைக்கா நிறுவனம் வாங்கியிருக்கிறது. அதுபோக ஒரு பிஎஸ்என்எல் போன்று ஒரு டெலிகாம் சர்விசையும் வாங்கிவிட்டாராம்.

ஒருபுறம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யை வைத்து படம் தயாரிக்கப் போகிறார்கள். இதுதவிர எக்கச்சக்க படங்களும் லைன் அப்பில் இருக்கும் நிலையில் லைக்கா பல பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கும் என அஜித் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.