லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஸ்கரன் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் அதிக முதலீடு செய்து வருகிறார். அந்த வகையில் லைக்கா கைவசம் 6 படங்கள் உள்ளது. இந்த படங்கள் கிட்டத்தட்ட 1000 கோடி பட்ஜெட்டுக்கு மேல் உருவாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் 2 : மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் உடன் இணைந்து லைக்கா நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை தயாரித்து இருந்தது. இப்போது வருகின்ற ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.
இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை லைக்கா சுபாஸ்கரன் தயாரித்து வருகிறார். இப்படம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டை தாண்டி உருவாகி வருகிறது. மேலும் இப்படத்தையும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட படக்குழு மும்மரம் காட்டி வருகிறது.
சந்திரமுகி 2 : பி வாசு இயக்கத்தில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா மற்றும் பல திரை நட்சத்திரங்கள் நடிப்பில் சந்திரமுகி 2 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை 250 கோடியில் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்போது சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது.
லால் சலாம் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ தோற்றத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லைக்கா சுபாஸ்கரன் பல கோடி முதலீட்டில் தயாரித்து வருகிறார்.
ஏகே 62 : அஜித்தின் ஏகே 62 படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தை லைக்கா பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இதுவரை அஜித் படத்தில் இல்லாத பிரம்மாண்டம் ஏகே 62 படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர் 170 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சூர்யாவின் ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170 ஆவது படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இந்த படத்தையும் லைக்கா தான் தயாரிக்க இருக்கிறது. இன்று சுபாஸ்கரனின் பிறந்தநாள் என்பதால் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.