Blue Sattai Maran Controversy: சோஷியல் மீடியாவில் யார் எவர் என்றெல்லாம் பார்க்காமல் பகிரங்கமாக தன்னுடைய விமர்சனத்தை பதிவிட்டு கொண்டிருப்பவர் தான் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினின் இரண்டு படங்களும் காப்பி தான் என லிஸ்ட் போட்டு புட்டு புட்டு வைத்திருக்கிறார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெருங்கிய நண்பரான மடோன் அஸ்வின் இதுவரை யாரிடமும் உதவி இயக்குனராக பணி புரியாமல் குறும்படங்களை எடுத்து, அதன் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர். இவர் முதன்முதலாக யோகி பாபுவை வைத்து மண்டேலா என்ற படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமின்றி தேசிய விருதையும் வென்றது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 14ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தையும் மடோன் அஸ்வின் தான் இயக்கி வெளியிட்டார். இந்த படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைப்பதால், உலகம் முழுவதும் தற்போது வரை 75 கோடியை வசூலித்து இருக்கிறது.
முன்பு இயக்குனர் அட்லீ தான் அட்டகாப்பி அடிக்கக் கூடியவர் என விமர்சித்ததால், இப்போது வெறுத்துப் போய் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். ஆனால் தற்போது அட்லீயை மிஞ்சும் அளவுக்கு மடோன் அஸ்வின் இருக்கிறார் என்று ப்ளூ சட்டைமாறன் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
2008ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்விங் ஓட்’ என்ற ஹாலிவுட் படம்தான் மடோன் அஸ்வின் முதல் முதலாக இயக்கிய மண்டேலா படம் என்றும், 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்ட்ரேஞ்சர் தென் ஃபிக்ஷன்’ என்ற படம்தான் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் என்று ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் லிஸ்ட் போட்டு பதிவிட்டு இருக்கிறார்.
இதற்கு நிச்சயம் மடோன் அஸ்வின் பதில் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அவருடைய இரண்டு படங்களின்உழைப்பையுமே ப்ளூ சட்டை மாறன் இப்படி அவமானப்படுத்தி இருப்பதற்கு பலரும் தங்கள் கமெண்ட்களின் மூலம் கருத்துக்களை பதிவிடுகின்றனர். இதே போலவே மடோன் அஸ்வினும் இதற்கு பதில் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.