மல்டிஸ்டார் ட்ரிக்ஸ் செமையா யூஸ் பண்ணும் மணிரத்தினம்.. ரங்கராயன் சக்திவேல் கூட இவ்வளவு நட்சத்திரங்களா?

Mani Ratnam casts several leading stars in Kamal’s Thug Life: காலத்தால் அழியாத காவியங்களை உருவாக்கிவிட்டு தான் சாதித்து விட்டேன் என்ற தலைக்கனம் சிறிதும் இல்லாமல் தன்னடக்கத்துடன் அடுத்த படைப்புக்குள் மூழ்கி போகும் மணிரத்தினம் தமிழ் சினிமாவின் பேராண்மையே! பொன்னியின் செல்வனுக்கு பின் கமலுடன் இணைந்த மணிரத்தினம் தக்லைப்பில் பல முன்னணி நட்சத்திரங்களை களம் இறக்குகிறார். அவர்களில் சிலர்,

துல்கர் சல்மான்:  மணிரத்தினத்தின் படங்களில் நடிப்பதையே தன் கனவாகக் கொண்டுள்ள கேரளத்து வரவு  துல்கர் சல்மான், ஓ காதல் கண்மணி படத்திற்கு பின் மணிரத்தினத்துடன் மீண்டும் இணைகிறார்.

திரிஷா: பொன்னியின் செல்வனுக்கு பின் குந்தவையின் மார்க்கெட் மட்டுமல்ல, அவரது படங்களின் எண்ணிக்கையும் அதிகமானது என்றே சொல்லலாம். லியோவிற்கு பின் அஜித்துடன் விடாமுயற்சி தற்போது தக்லைப், மேலும் ரஜினியுடன் ஒரு படம் என அடுத்தடுத்து வெற்றி படங்களில்  கமிட் ஆகி வருகிறார் திரிஷா.

ஜெயம் ரவி: பொன்னியின் செல்வன் கதை விவாதத்தில் கதை சொல்லிவிட்டு, நீதான் பொன்னியின் செல்வன் என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மணிரத்தினம். அதேபோல் மீண்டும் ஒரு முறை கமலுடன் இணைய வைத்து ஜெயம் ரவியின் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்தார் மணிரத்தினம்.

அபிராமி போஸ்: மராத்தி நடிகை ஆன அபிராமி போஸ் அவர்களின் திறமையை பார்த்து வியந்த மணிரத்தினம், தக்லைப் படத்தின் மூலம் அபிராமி போஸ் அவர்களை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்துகிறார்.

நாசர்: உலகநாயகன் கமல் எப்போதுமே விட்டுக் கொடுக்காத சில நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நாசர். கொடுக்கும் கதாபாத்திரத்தை அசால்ட்டாக செய்துவிட்டு போகும் நாசர், நாயகனில் காவல் அதிகாரியாக வேலு நாயக்கனின் மகளை கரம் பிடித்து இறுதி காட்சி வரை பயணித்தவர். அதேபோல் தக்லைப்பிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்திற்காக பாலிவுட் நட்சத்திரம் ஒருவருக்கும் தூண்டில் போட்டு உள்ளாராம் மணிரத்தினம். இப்படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு தொழில்நுட்பத்திற்கும் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களது பங்களிப்பை வழங்குவதன் மூலம் அனைத்திலும் சிறந்ததாக உருவாகி வரும் தக்லைப் இன்னும் அரை நூற்றாண்டுக்கு மேல் பெருமை பேசும் என்பதில் சந்தேகமில்லை.