தர லோக்கலா கமல், சிம்பு செய்த வேலை.. தலையில் அடித்து எஸ்கேப்பான மணிரத்தினம் 

Thug Life: பாண்டிச்சேரியில் கமல் மற்றும் சிம்பு நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் தக் லைப் படம் 70 சதவீதம் முடிந்து விட்டது. படத்தில் முக்கியமான ஒரு சண்டை மற்றும் பாடல் காட்சிகளை கோவளம் மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கி வருகின்றனர்.

இதற்காக கமல் மற்றும் சிம்பு என மொத்த பட குழுவும் பாண்டியில் தான் முகாமிட்டு உள்ளனர். இந்த படத்தில் மீனவர் குப்பத்தில் நடைபெறும் ஒரு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில்  சிம்புவிற்கு வில்லன் கதாபாத்திரம், இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார் என்றெல்லாம் கூறி வந்தனர். ஆனால் இதில் கமலுக்கு பையனாக சிம்பு நடிக்கிறார்.

கமல்  மற்றும் சிம்பு இருவரும் நடனமாடும் ஒரு தர லோக்கல் பாடல் படத்தில் இருக்கிறது. அதற்காகத்தான் இருவரும் பாண்டிச்சேரியில் நடித்து வருகிறார்கள். காதலா காதலா படத்தில் பிரபு தேவாவுடன் கமல் ஆடும் காசு மேலே காசு  பாடல் காட்சிகள் போல் இந்த  பாடலை உருவாக்கி வருகின்றனர்.

தலையில் அடித்து எஸ்கேப்பான மணிரத்தினம் 

பாண்டிச்சேரியில் இப்பொழுது கடும் வெயில் அடிக்கிறதாம். அதனால் இந்த பாடல்  காட்சிகளை  அவரது அசிஸ்டண்டை வைத்து எடுக்க சொல்லிவிட்டு மணிரத்தினம் சென்னை வந்து விட்டாராம். இதுபோக மற்றும் ஒரு சண்டைக் காட்சி மட்டும் பாண்டிச்சேரியில் எடுக்கவிருக்கிறார்கள்.

கேப்டன் இல்லாத கப்பல் போல் மணிரத்தினம் இல்லாமல் கமல் மற்றும் சிம்பு கடும் லூட்டி அடித்து வருகின்றனர். சூட்டிங்  இல்லாத சமயத்தில் கூட  ரெண்டு பேரும் செம குத்தாட்டம் போட்டு வருகிறார்கள். வயசானாலும் கமல் பாட்டுக்காக மெனக்கெட்டு தர லோக்கலா இறங்கி வேலை செய்கிறாராம். கமல் அப்படி என்றால் சிம்பு இப்படி என்பது போல் இருவரும் கலக்குகின்றனராம்.

வாய்ப்பை உருவாக்கி வளைத்து போடும் மணிரத்தினம்