ஒரே வாரத்தில் கை நிறைய அள்ளிய வசூல்.. ஆண்டவரை பார்த்த உற்சாகத்தில் மஞ்சுமல் பாய்ஸ்

Manjummel Boys: நல்ல தரமான படைப்புகளை ரசிகர்கள் கொண்டாட தவறுவதில்லை. அதிலும் அண்மைக்காலமாகவே மலையாளத்தில் வெளிவரும் படங்கள் வேற லெவலில் கலக்கிக் கொண்டிருக்கிறது. மம்முட்டியின் பிரமயுகம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் மிரட்டியது.

அதை அடுத்து தற்போது வெளிவந்திருக்கும் மஞ்சுமல் பாய்ஸ் ஆடியன்சால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பிரமயுகம் 10 நாட்களில் செய்த வசூல் சாதனையை இப்படம் ஒரே வாரத்தில் செய்து காட்டி இருக்கிறது.

அதன்படி தற்போது இப்படம் 50 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. குணா குகைக்கு வரும் நண்பர்கள் பட்டாளம் அங்கு மாட்டிக்கொண்டு தவிப்பதும், அதில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதும் தான் இப்படத்தின் கதை. சுருக்கமாக சொல்லப்போனால் குணா படம் இல்லை என்றால் இப்படம் கிடையாது.

அதனாலயே தற்போது படக்குழுவினர் குணா நாயகனை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். அந்த வகையில் கமல் மற்றும் குணா படத்தின் இயக்குனர் சந்தான பாரதியை மஞ்சுமல் பாய்ஸ் டீம் சந்தித்திருக்கிறார்கள். அந்த போட்டோ தான் இப்போது வைரலாகி வருகிறது.

இதை தன் சோசியல் மீடியா பக்கத்தில் பதவிட்டுள்ள இயக்குனர் சிதம்பரம் இதுதான் ரியல் கிளைமாக்ஸ் என சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் படத்தை புகழ்ந்து தள்ளிய உதயநிதியையும் அவர்கள் சந்தித்துள்ளனர்.

ஆக மொத்தம் தமிழில் உலக நாயகனின் குணா வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போதும் கூட ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கிறது. அதன் தாக்கமாக வெளிவந்த மஞ்சுமல் பாய்ஸ் வசூலில் பட்டையை கிளப்பி இருப்பது நமக்கும் பெருமை தான்.