வெறித்தனமாக வசூல் வேட்டையாடும் மார்க் ஆண்டனி.. 2 வார வசூல் இத்தனை கோடியா?

Mark Antony 2nd Week Collection: தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்களும், அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களும் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வரும்பொழுது அவ்வப்போது நல்ல கதைக்கு பெரிய ஹீரோவும் தேவை இல்லை, அதிக பட்ஜெட்டும் தேவையில்லை என ஒரு சில படங்கள் நிரூபித்து வருகின்றன. அந்த வகையில் ரிலீஸான படம் தான் மார்க் ஆண்டனி.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், வினோத்குமார் தயாரிப்பில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த இந்த படம் ஒட்டுமொத்த ஆடியன்ஸ்களிடமிருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்களை மட்டுமே பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு செல்வதால் பட்ஜெட்டை விட கலெக்சன் பலமடங்கு வந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் டைம் ட்ராவல் கதையை மையப்படுத்தி உருவான இந்த படம் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை கருத்தில் கொண்டு ரிலீஸ் செய்யப்பட்டது. போட்ட பிளான் சொதப்பாமல் வசூலில் வேட்டையாடி வருகிறது மார்க் ஆண்டனி. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 28 கோடியாகும். இப்போது இரண்டு வாரத்தில் 85 கோடி வசூல் செய்திருக்கிறது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் ஒரு பக்கம் கோடிக்கணக்கில் வசூலை குவித்துக் கொண்டிருந்தாலும், நேரடி தமிழ் படமாக வெளியான மார்க் ஆண்டனி தியேட்டர் ஆடியன்ஸ்களை அதிகமாக கவர்ந்து தற்போது சோலோ ஹீரோவாக ஓடிக் கொண்டிருப்பது தான் படத்தின் மிகப்பெரிய வசூல் சாதனைக்கு முக்கியமான காரணமாகும்.

வித்தியாசமான கதைக்களம், வயிறு குலுங்க வைக்கும் காமெடி காட்சிகள், பார்ப்பவர்களை மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவிற்கு எஸ் ஜே சூர்யா வின் நடிப்பு என படத்திற்கு அனைத்துமே பாசிட்டிவாக அமைந்துவிட்டது. படத்தின் டிரைலர் வெளியாகும் போதே வெற்றி உறுதியாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ட்ரெய்லர் எடிட்டிங்களிலேயே ரசிகர்களை கவர்ந்து விட்டார் இயக்குனர்.

தற்போது இந்த படம் 85 கோடி வசூல் செய்திருக்கும் நிலையில் விரைவில் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லவ் டுடே படத்திற்கு பிறகு இப்படி சின்ன பட்ஜெட்டில் உருவான படம் பெரிய லாபத்தை பார்த்திருக்கிறது என்றால் அது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம் தான்.