லோகேஷ் யூனிவர்ஸ் மூலம் போடும் மாஸ்டர் பிளான்.. 10 வருஷம் எதுவும் யோசிக்க மாட்டியா என ஆச்சரியப்பட்ட பிரித்விராஜ்

தற்போதைய தமிழ் சினிமாவின் அதிக கவனம் பெற்ற இயக்குனர் யார் என்று கேட்டால் லோகேஷ் கனகராஜ் என்ற பதில் தான் கிடைக்கும். அந்த அளவுக்கு அவர் விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு முன்னணி அந்தஸ்தை அடைந்திருக்கிறார். அதனாலேயே தற்போது இவர் இயக்கும் தளபதி 67 திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் கைதி, விக்ரம் திரைப்படங்களின் அடுத்த பாகத்திற்கான முயற்சியிலும் இவர் இருக்கிறார். அந்த வகையில் இவர் இப்போது லோகேஷ் யுனிவர்ஸ் என்ற ஒரு பயங்கர திட்டத்தை போட்டு அதன் மூலம் ஒவ்வொரு படத்தையும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும் வகையில் எடுக்கவும் ப்ளான் செய்து வருகிறார். ஏற்கனவே கைதி திரைப்படத்தின் தொடர்ச்சியாக விக்ரம் திரைப்படத்தின் கதை அமைந்திருந்தது.

அதனாலேயே அந்த படங்களின் அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். அதை தொடர்ந்து தற்போது உருவாகும் தளபதி 67 திரைப்படமும் அப்படி ஒரு முயற்சியில்தான் எடுக்கப்படும் என்று கூறுகின்றனர். மேலும் அதில் கமலும் ஒரு கௌரவ தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் இப்படி லோகேஷ் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கிறார்.

இதைப் பற்றி நடிகர் பிரித்விராஜ் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தளபதி 67 திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க லோகேஷ் இவரை அணுகி இருந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் மலையாளத்தில் பிஸியாக இருக்கும் பிரித்விராஜ் அந்த படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலையில் இருந்தார். அதை குறிப்பிட்ட அவர் சமீபத்தில் லோகேஷ் உடன் நடந்த உரையாடல் பற்றியும் கூறி இருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பு கமல், ராஜமவுலி, பிரித்விராஜ், லோகேஷ் உட்பட பல பிரபலங்கள் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். அதில் அவர்கள் பல விஷயங்களைப் பற்றியும் விவாதித்தார்கள். அப்போது பிரித்விராஜ் லோகேஷிடம் அடுத்த 10 வருடங்களுக்கு உங்களுக்கு கதையே தேவைப்படாது, இப்போதே நீங்கள் அதற்கான தயார் நிலையில் தான் இருக்கிறீர்கள் என வேடிக்கையாக கூறி இருக்கிறார்.

சொல்லப்போனால் லோகேஷ் யுனிவர்ஸ் மூலம் அவர் இப்படிப்பட்ட ஒரு திட்டத்தில் தான் இருக்கிறார். அதாவது கைதி, விக்ரம், தளபதி 67 போன்ற படங்கள் அடுத்தடுத்து ஒரு தொடர்ச்சியாக வெளிவருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இதைத்தான் தற்போது பிரித்விராஜ் நாசுக்காக குறிப்பிட்டு இருக்கிறார். இந்த விஷயம் தற்போது ரசிகர்களின் ஆவலை தூண்டி இருக்கிறது. இது தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு தரமான முயற்சி என்பதை மறுக்க இயலாது.