Sivakarthikeyan Maveeran Movie: மண்டேலா திரைப்படத்தை எடுத்த இயக்குனர் மடோன் அஸ்வின் தற்போது வான்டெட் இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார். அதற்கு காரணம் இவர் எடுத்த மண்டேலா படம் ஏற்கனவே இரண்டு விருதுகளை வாங்கி இருக்கிறது. அடுத்தபடியாக தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படமும் அனைத்து ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் மறுபடியும் ரசிகர்களின் மனதில் இவருக்கான ஒரு இடத்தை பிடித்து விட்டார். இவருடைய முந்தைய படமான பிரின்ஸ் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படத்திலேயே இவருடைய ஆட்டம் கிளோஸ் என்றும், இனிமேல் இவருடைய சினிமா கேரியர் அவ்வளவுதான் என பல பேச்சுக்கள் அடிபட்டது.
இதன் மூலம் தன்னுடைய மார்க்கெட் குறைந்து விடும் என்று மிகவும் கதிகலங்கி போய்விட்டார் சிவகார்த்திகேயன். ஆனால் அதெல்லாம் இல்லை நான் எப்படி போனேனோ, அதே மாதிரி திரும்ப வந்து நிற்பேன் என்று ஆணித்தனமான நம்பிக்கை வைத்து அதற்கு ஏற்ற மாதிரி நடிப்பை கொடுத்து வசூல் அளவில் சாதித்து விட்டார்.
இப்படம் வெளிவந்து ஐந்து நாட்கள் மட்டுமே ஆன நிலையில் 50 கோடிக்கு மேல் வசூலை பெற்று பெரிய லாபத்தை தயாரிப்பாளர் பார்த்து பண மழையில் நனைந்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு அடுத்த படத்திற்கான சம்பளம் உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அத்துடன் ஏற்கனவே இவரை தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்த நிலையில் இப்படத்தின் வெற்றி இன்னும் இவரை கூடுதலாக மேலோக்கி விடும்.
அது மட்டுமில்லாமல் இப்படத்திற்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் வந்த நிலையில், வெளியான முதல் நாளிலேயே எதிர்பார்க்காத அளவிற்கு கிட்டத்தட்ட 8 கோடிக்கும் மேல் வசூலை பெற்றதால் சிவகார்த்திகேயன் நிம்மதியான ஒரு பெரும் மூச்சை விட்டிருக்கிறார். இதன் மூலம் இவர் ஆசையுடன் காத்துக் கொண்டிருக்கும் பாலிவுட் படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் தேடி வரும்.
இதைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் அயலான் படத்திற்கும் மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் இவர் எடுத்திருக்கும் ஏலியன்ஸ் கதைதான். இதுவரை தமிழில் அப்படி எந்த ஒரு படமும் வராத பட்சத்தில் சிவகார்த்திகேயன் மாதிரியான ஒரு மாஸ் ஹீரோ நடித்து வருவதால் எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் எகிற வைத்து வருகிறது.