கஷ்டப்பட்டு மகனுக்காக வாய்ப்பு வாங்கிக் கொடுத்த மயில்சாமி.. ஒரே படத்தில் முடிந்த கேரியர்

சமீபத்தில் காமெடி நடிகர் மயில்சாமியின் மறைவு திரை துறையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இறப்புக்குப் பிறகுதான் மயில்சாமியின் நல்ல குணங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. எல்லோருக்கும் தானம், தர்மம் செய்யும் நல்ல குணம் உடையவராக வாழ்ந்து சென்றுள்ளார்.

கடந்த ஒரு வாரங்களாக இணையம் முழுவதும் அவரைப் பற்றிய செய்திகள் தான் உலாவி வருகிறது. அந்த வகையில் அவர் நடித்த படங்கள் மற்றும் பிரபலங்கள் அவரைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்ற தகவல் வெளியாகி வருகிறது. மேலும் மயில்சாமி தனது வாரிசையும் சினிமாவில் கொண்டு வந்துள்ளார்.

அதாவது மயில்சாமி ஆரம்பத்தில் சினிமாவில் நுழைய நிறைய கஷ்டப்பட்டு வந்துள்ளார். அதன் பின்பு தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். ஆனால் தனது மகனுக்காக பல இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தார்.

அதன்படி இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்டி என்ற படத்தில் மயில்சாமி தனது மகன் அருமைநாயகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை. இதனால் தனது மகனுக்காக நல்ல கதையை மயில்சாமி தேடிக்கொண்டிருந்தார்.

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இறைவன் மயில்சாமியை அழைத்துக்கொண்டார். மேலும் தனது தந்தை இறப்பை பற்றி மயில்சாமியின் மகன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அவர் பேச்சிலிருந்தே மயில்சாமி தன்னை போல தனது மகனையும் நன்றாக வளர்த்துள்ளார் என்பது தெரிந்தது.

ஆனால் மயில்சாமி தனது மகனை நல்ல நடிகனாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இனி அருமை நாயகம் தனியாளாக சினிமாவில் எப்படி வாய்ப்பு தேடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் சினிமா இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.