கண்ணழகை வைத்து மொத்த இந்தியாவையும் தன் கைக்குள் வைத்தவர் நடிகை மீனா. இப்போதும் இவரைப் பார்த்து ஏங்கும் ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்த அளவிற்கு அழகு ராணியாக வலம் வந்தவர்.
சமீபத்தில் தன்னுடைய 40 வருட திரை வாழ்க்கையை கொண்டாடிய மீனா, சினிமா வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை மிஸ் செய்தேன் என்பதை பற்றி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் இரண்டு முக்கிய படங்களின் வாய்ப்பை தவறவிட்டது தான் மறக்க முடியாத ஒன்று எனவும் வருத்தப்பட்டுள்ளார். அந்த இரண்டு படங்களிலும் நடிக்க முடியாமல் போன காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
அதில் ஒன்று சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற படையப்பா படம் தான். ரம்யா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் ஒப்பந்தமானவர் மீனா தான்.
அதேபோல் கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது தேவர் மகன். மரண மாஸ் வெற்றி பெற்ற இந்த படத்தில் ரேவதி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் மீனா.
ஆனால் இந்த இரண்டு பட வாய்ப்புகளும் வரும் போது மற்ற மொழிகளில் பிஸியாக இருந்ததால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை, இதுவே இந்த படங்களை மிஸ் பண்ண காரணமாக அமைந்து விட்டதாம். இன்றும் அந்த படங்களை பார்க்கும் போது இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை மிஸ் செய்து விட்டேனே என யோசிப்பதாகவும் கூறியுள்ளார்.
