cinema : சினிமாத்துறையில் இவர்களுக்குத்தான் இந்த படத்தின் கதையை எழுதினேன். அதனால் இவர்களுக்கு இது பொருந்தியது என்று இயக்குனர்கள் சொல்ல கேட்டிருப்போம்.
அதை போல இந்த கதை எனக்கானது, நான் இதில் நடிக்க தவறவிட்டுடேன், என நிறைய நடிகர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதே போல இப்போ ஒரு சம்பவம் தரமானதாக நடந்துள்ளது.
நான்தான் மெய்யழகன், அத்தான் வசனமே எனக்காகத்தான்..
அதாவது கார்த்தி, அரவிந்த்சாமி அவர்கள் நடித்து வெளிவந்து அனைவர் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம்தான் மெய்யழகன். அந்த படத்தில் மெய்யழகன் அதைப்பாத்திரத்தில் கார்த்தி அவர்கள் அத்தான் அத்தான் என்று சொல்லியே நம்மை உருக வைத்திருப்பர்.
சமீபத்தில் விஜய் சேதுபதி அளித்திருந்த பேட்டி ஒன்றில் அவர் நந்தன் மெய்யழகன் படத்தில் கார்த்தி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தேன். ஆனால் நான் அப்போது வேறு படம் நடித்து கொண்டிருந்ததால் எந்நல அந்த படம் பண்ணமுடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இந்த பாடத்தில் நடிகர் கார்த்தி ஆகட்டும் நடிகர் விஐய் சேதுபதி ஆகட்டும் யார் நடித்திருந்தாலும் இந்த கதாபாத்திரம் அருமையாக செய்திருப்பார்கள். ஏனெனில் இரண்டு நடிகரும் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்ட கூடிய நடிகர்கள்.
ஆனால் இதில் இருவரையுமே இவர் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என பிரித்து பார்க்க முடியாது ஏனெனில் இருவருமே நடிப்பில் மிரட்ட கூடிய நடிகர்கள் இதில் யார் நடித்தாலும் இந்த படம் கண்டிப்பாக ரீச் ஆயிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.