புரட்சித்தலைவர் என ரசிகர்களால் போற்றப்பட்ட எம்ஜிஆர் இன்று வரை மறக்க முடியாத ஒரு மாபெரும் தலைவர். தலைவர் மட்டுமின்றி அவர் ஒரு நல்ல நடிகர். சினிமாவை வைத்து தான் அரசியலுக்கு வித்திட்டார் எம்ஜிஆர். 1977 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக அவரை ரசிகர்கள் சிம்மாசனத்தில் அமர வைத்து ரசித்தார்கள்
ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்து வந்தனர். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் , அஜித், விஜய் என அந்தப் பட்டியல் வளர்ந்துகொண்டே போகிறது. அப்படி பல நடிகர்கள் நடித்து சாதனை படைத்துள்ள ஒரு கதை களத்தை இன்று வரை எம்ஜிஆர் நடித்தது இல்லையாம்.
அதாவது தந்தை- மகன் கதாபாத்திரம் தான் அது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், தல அஜித், தளபதி விஜய் என அனைவரும் தந்தை மகன் கதாபாத்திரத்தில் நடித்து விட்டனர். அப்படி நடிப்பது ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதால் அதை எந்தவித தயக்கமுமின்றி ஏற்று நடித்தனர்.
அந்தப் படங்களும் சூப்பர் ஹிட் கொடுத்தது. ஆனால் எம்ஜிஆர் மட்டும் இதுவரை அப்படி ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்கவில்லையாம். சின்னப்பதேவர் ஒருமுறை எம்ஜிஆரை வைத்து இந்த மாதிரி ஒரு கதை களத்தை உருவாக்கி இருக்கிறார். ஆனால் அதிலும் எம்ஜிஆர் நடிக்கவில்லையாம்.
அந்த படத்திற்கு பெயர் தந்தை மகன் என்றே வைக்கப்பட்டதாம். இதுவரை அந்த மாதிரி எம்ஜிஆரை பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கு அது ஒரு நிறைவேறாத ஆசையாகவே போனது. 50 வயதிற்கு மேல் தான் சினிமாவில் எம்ஜிஆருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்து தமிழ் திரையுலகையே ஒரு கலக்கு கலக்கினார்.
ஒருவேளை அந்த வயதில் தந்தை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தால் மறுபடியும் அப்படி போன்ற கதாபாத்திரம் தொடரும் என்பதற்காகவே தந்தை-மகன் இரட்டை வேடத்தில் நடிப்பதை எம்ஜிஆர் அறவே தவிர்த்திருக்கிறார். இருப்பினும் அவர் மட்டும் ரசிகர்கள் விரும்பியவாரே தந்தை-மகன் இரட்டை வேடத்தில் நடித்தால் நிச்சயம் அந்த படம் சூப்பர் டூப்பர் வெற்றி கண்டிருக்கும்.