அட மைக் மோகன் இவ்வளவு ரெக்கார்டு வச்சிருக்கிறாரா.? காலை முதல் இரவு வரை தவம் கிடக்கும் தயாரிப்பாளர்கள்

மைக் மோகன் தமிழ் சினிமாவில் இருந்த காலம் வசந்த காலம் என்று சொல்லலாம். ஏனென்றால் அப்போது தான் ரசிகர்களிடையே பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மைக் மோகன் பல ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளார். அதாவது கன்னடத்தில் உருவான கோகிலா படத்தின் மூலம் நடிகராக மோகன் அறிமுகமானார்.

அதன் பின்பு மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்த மோகன் முதல்முறையாக தமிழில் மூடுபனி படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக அடுத்ததாக நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அவ்வாறு தமிழில் வெளியான முதல் மூன்று படங்களுமே வெற்றி கொடுத்திருந்தார்.

மோகனின் பெரும்பான்மையான படங்களில் இளையராஜா தான் இசை அமைப்பார். அந்த வகையில் இளையராஜாவின் நூறாவது படம் மைக் மோகனின் மூடுபனி படமாகும். அதேபோல் அவரின் 300 வது படம் மோகனின் உதயகீதம் படம். பெரும்பாலும் மேடையில் பாடகராக தான் மோகன் அதிக படங்களில் நடித்துள்ளார்.

அதனால் தான் அவருக்கு மைக் மோகன் என்ற பெயர் வந்தது. ஆனால் இதுவரை இவர் தனது சொந்த குரலில் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. அப்படி இருந்த போதும் தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்துள்ளார். மேலும் அவரது படங்கள் நெடுங்காலமாக ஓடுவதால் வெள்ளி விழா நாயகன் என்ற பெயரும் உண்டு.

மேலும் கொடுத்த வாக்கில் இருந்து எப்போதுமே மைக் மோகன் பின் வாங்க மாட்டாராம். அதாவது இதுவரை எந்த ஒரு படத்திலும் கால்ஷீட் செதப்பியது கிடையாதாம். சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து நடித்து முடித்து கொடுத்து விடுவாராம். அப்போது ரஜினி, கமல் படத்தை விட மோகன் படத்திற்கு தான் திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல்லாக இருக்குமாம்.

இதனால் மோகனின் கால்ஷீட்டை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர்கள் அவரது வீட்டில் காலை முதல் இரவு வரை காத்துக் கிடப்பார்களாம். முழு படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் கெஸ்ட் ரோலாவது பண்ணுங்கள் என தயாரிப்பாளர்கள் தவம் கிடந்துள்ளனர்.