மத கத ராஜாவால் மீண்டும் பார்முக்கு வந்த சுந்தர் சி.. வயிறு குலுங்க சிரிக்க இந்த 6 படத்தை மிஸ் பண்ணாம பாருங்க

Sundar C: இயக்குனர் சுந்தர் சி, 12 வருடத்திற்கு முன்னாடி எடுத்த மத கத ராஜா படத்தை இப்போ ரிலீஸ் செய்து மாஸ் காட்டி இருக்கிறார்.

இப்போதைய தலைமுறைக்கு சுந்தர் சி என்றால் அரண்மனை சீரிஸ் படங்களை எடுக்கும் இயக்குனராக தான் தெரியும்.

90ஸ் கிட்ஸ் களுக்கு தான் இவர் பலே கில்லாடி ஆன டாப் இயக்குனர் என்பது தெரியும்.

கமர்சியல் இயக்குனர்களுக்கு பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பு இல்லை என தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.

ஆனால் தன்னுடைய மசாலா படங்களின் மூலம் இவர் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். சுந்தர் சி இயக்கத்தில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.

முறைமாமன்: ஜெயராம்- கவுண்டமணி காம்போவில் படம் முழுக்க சிரிக்க வைத்திருப்பார் இயக்குனர். 1995 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி இருந்தாலும் இன்று வரை பீல் குட் மூவியாக இது இருக்கிறது.

ஜெயராம் மற்றும் கவுண்டமணியின் அண்ணன் தம்பி கெமிஸ்ட்ரியில் இந்த படத்தை மிஸ் பண்ணாமல் ஒருமுறையாவது பார்த்து விடுங்கள்.

உள்ளத்தை அள்ளித்தா: கார்த்திக்- கவுண்டமணி- மணிவண்ணன் காமெடி கலாட்டாவில் உருவான படம் தான் உள்ளத்தை அள்ளித்தா.

படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை சிரிப்பொலி மட்டுமே இருக்கும். அந்த அளவுக்கு சுந்தர் சி இந்த படத்தை இயக்கி இருப்பார்.

இந்த படம் சுந்தர் சி என் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

மேட்டுக்குடி: சுந்தர் சி யின் அப்போதைய படங்களின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது கவுண்டமணி தான்.

அதற்கு மிகப்பெரிய உதாரணம் மேட்டுக்குடி படம். உள்ளத்தை அள்ளித்தா படத்தின் வெற்றி தொடர்ந்து கார்த்தி கவுண்டமணி காம்போவில் இந்த படம் சக்கை போடு போட்டது.

அருணாச்சலம்: இப்போதைய தலைமுறைகளுக்கு சுந்தர் சி சூப்பர் ஸ்டாரை வைத்து மாஸ் ஹிட் கொடுத்த இயக்குனர் என்று பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வளர்ந்து வரும் இயக்குனராக சுந்தர் சி இருக்கும்போதே ரஜினி அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அருணாச்சலம் என்ற பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்தார் இயக்குனர் சுந்தர்சி.

சுயம்வரம்: தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டு கின்னஸ் ரெக்கார்ட் அடித்த படம் தான் சுயம்வரம். இந்த படத்தை இயக்கிய 15 இயக்குனர்களின் சுந்தர் சி யும் ஒருவர்.

கின்னஸ் ரெக்கார்டுக்காக எடுக்கப்பட்டது என்பதை தாண்டி இந்த படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய சுவாரஸ்யமான கதைகளத்துடன் இருக்கும்.

வின்னர்: கைப்புள்ள என்ன சூப்பர் கேரக்டரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது இயக்குனர் சுந்தர் சி தான்.

படத்தின் கதை சுமாராக இருந்தாலும் வடிவேலு காமெடியால் இந்த படம் பட்டி தொட்டி எங்கும் வெற்றிவாகை சூடியது.

Leave a Comment