ஒரு டசன் படம் கையில் இருந்தும் கேஜிஎப் கூட்டணியில் இணையும் நயன்தாரா.. பணத்தாசையால் தவிக்கும் தயாரிப்பாளர்கள்

நடிகை நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தன்னுடைய ஆறு வருட காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார். திருமணத்திற்கு முன்பே அவர் அட்லீயின் இயக்கத்தில், பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துவிட்டதால் திருமணம் முடிந்து தாய்லாந்துக்கு தேனிலவு சென்று திரும்பிய நயன்தாரா இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

நயன்தாரா திருமணத்திற்கு பிறகு புதிய படங்களில் எதுவும் கமிட் ஆகவில்லை. மேலும் திருமணத்திற்கு பிறகு வேறு எந்த புதிய படங்களிலும் நடிக்க போவதில்லை என்றும், இதற்கு முன் கால்ஷீட் கொடுத்த படங்களில் மட்டுமே நடித்து கொடுக்க போவதாகவும், இனி சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட போவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் நயன்தாரா குழந்தைகள் மற்றும் திருமணத்திற்கு முன்பே, யாஷ் நடித்த கேஜிஎஃப் தயாரிப்பாளர் கொம்பாலயா உடன் படம் பண்ணுவதாக உறுதியளித்து இருக்கிறார். இந்த படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக உருவாக இருக்கிறது. இந்த படம் எடுக்க அந்த தயாரிப்பாளர் நயன்தாராவுக்காக காத்து கொண்டிருக்கிறார்.

நயன்தாராவுக்கு அடுத்தடுத்து கோல்டு, ஜவான், கனெக்ட், பாட்டு, ஆட்டோ ஜானி, நயன்தாரா 75, ஏகே 62 என அடுத்தடுத்து டஜன் கணக்கில் படங்களை வைத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது இவர் கேஜிஎஃப் தயாரிப்பாளர் உடன் பணியாற்றவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்படி அடுக்கடுக்காக படத்தை ஓகே செய்து வைத்திருக்கிறார்.

இப்படி வரும் வாய்ப்புகளுக்கு எல்லாம் ஓகே சொல்லி கொண்டிருக்கும் நயன்தாராவால் தயாரிப்பாளர்கள் தான் திக்குமுக்காடி கொண்டிருக்கின்றனர். இப்போது எல்லா தயாரிப்பாளர்கள் எல்லாம் இவர் எப்போது கால்ஷீட் கொடுப்பார், படப்பிடிப்புக்கு வருவார் என கதையை கையில் வைத்துக் கொண்டிருக்கின்றனர். நயன்தாராவுக்கும் இது இக்கட்டான சூழ்நிலை தான்.

இருந்தாலும் பணத்திற்காக நயன்தாரா வரும் வாய்ப்புகளை எல்லாம் வாரி குவித்து கொண்டிருக்கிறார். சினிமாவை விட்டே ஒதுங்கும் முடிவில் இருந்த நயன்தாரா, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முடிவெடுத்து விட்டார். சமீபத்தில் இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் நயன்தாரா எப்படி இதற்கெல்லாம் கால்ஷீட் கொடுத்து சமாளிக்க போகிறார் என இனிதான் தெரியும்.