லேடி சூப்பர் ஸ்டாரை லாக் செய்த திரையரங்கு உரிமையாளர்கள்.. வேறு வழியின்றி சரண்டரானார் நயன்தாரா

நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர். திருமணத்திற்கு பின்னும் இன்னும் டாப் 1 இடத்திலேயே இருக்கிறார். ஹீரோக்களுக்கு இணையாக இவர் சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்ததன் மூலம் மற்ற ஹீரோயின்களுக்கும் தனிக் கதாநாயகியாக நடிக்கும் தைரியத்தை கொடுத்தவர்.

நயன்தாரா முதன்முதலில் தனி கதாநாயகியாக நடித்த திரைப்படம் தான் மாயா. இது ஒரு திகில் திரைப்படம் ஆகும். இந்த படம் நயன்தாராவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அடுத்தடுத்து என்ன என்று யூகிக்க முடியாத அளவுக்கு சஸ்பென்ஸ் நிறைந்த படமாக இது இருந்தது. இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்கி இருந்தார்.

இப்போது இந்த வெற்றி கூட்டணி மீண்டும் சேர்ந்திருக்கிறது. அஸ்வின் சரவணன் இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா நடித்த திரைப்படம் தான் கனெக்ட். இந்த படத்தின் ட்ரெய்லரே பார்வையாளர்களை மிரள செய்திருந்தது. ஹாலிவுட் ரேஞ்சுக்கு இடைவேளை இல்லாமல் இந்த படம் ரிலீஸ் ஆக இருந்தது. இதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது.

ஆனால் நயன்தாராவின் இந்த முடிவுக்கு தான் திரையரங்கு உரிமையாளர்கள் இப்போது ஆப்பு வைத்திருக்கிறார்கள். அதாவது தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட் விலையை தாண்டி அதிகம் சம்பாதிப்பது என்பது இடைவேளையின் போது தான். இடைவெளியே இல்லாமல் 99 நிமிடமும் படம் மட்டுமே ஓடினால் நாங்கள் எப்படி சம்பாதிப்பது, படம் கண்டிப்பாக இடைவேளையுடன் தான் வெளியாக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அப்படி அதற்கு சம்மதிக்காவிட்டால் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாது என்று கறாராக சொல்லிவிட்டார்களாம். நயன்தாரா இந்த படத்தின் வெற்றியை பெரிய அளவில் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார். திருமணம், குழந்தைகளுக்கு பிறகு முதன் முதலில் ரிலீஸ் ஆகும் திரைப்படம் இது. வேறு வழியின்றி திரையரங்கு உரிமையாளர்களுக்கு சரி என்று சொல்லி 59 வது நிமிடத்தில் இடைவேளை வரும்படி செய்து இருக்கிறாராம்.

கனெக்ட் திரைப்படத்தை நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் வினய், சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கீர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு வீட்டுக்குள் நடக்கும் திகில் சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது.