அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு படம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இதற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்காக அஜித் கிளீன் சேவ் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடக்க உள்ளதாம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் தளபதி விஜய் பட நடிகையை இந்த படத்தில் கமிட் செய்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
அதாவது ஒரு காலத்தில் இவர்கள் காம்போவில் படம் வெளியானால் ஹிட்டு தான் என்ற அளவுக்கு பேசப்பட்டது. அதாவது விஜயின் கில்லி, குருவி, திருப்பாச்சி, ஆதி போன்ற படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை திரிஷா. இப்போது ஏகே 62 படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளாராம்.
அஜித்துடன் இவர் ஏற்கனவே கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக த்ரிஷாவுக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் மார்க்கெட் எதுவும் இல்லை. ஆனால் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வெளியான பிறகு இவரது மார்க்கெட் உச்சத்தை தொட்டது.
ஏனென்றால் இந்த படத்தில் திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஆகையால் விக்னேஷ் சிவன் தனது படத்தில் திரிஷாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். ஒரு காலகட்டத்தில் திரிஷாவின் மார்க்கெட்டை இறக்கி நயன்தாரா நம்பர் ஒன் இடத்திற்கு வந்தார்.
இப்போது ஏகே 62 படத்தில் திரிஷா நடித்த உள்ளதால் விக்னேஷ் சிவனால் நயன்தாராவின் மார்க்கெட் சரியா வாய்ப்புள்ளது. மேலும் இந்த படத்தின் மூலம் மீண்டும் தனது நடிப்பு திறமையை த்ரிஷா பதிவு செய்வார் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த படத்திற்கான வேலை முழுவீச்சாக நடந்து வருகிறது.