லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சாதாரணமாக இந்த இடத்திற்கு வரவில்லை. அவர் சினிமாவுக்கு வந்த புதிதில் மார்க்கெட் சற்று மந்தமாக தான் சென்றது. அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்ததால் மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.
அதன் பிறகு டாப் ஹீரோக்களான அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நயன்தாரா நடிக்க ஆரம்பித்தார். பில்லா படத்தில் இவரது நடிப்பும், கவர்ச்சியும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. அதன் பிறகு சினிமாவில் பல உயரங்களை அடைந்து தற்போது ஒரு சிங்கப் பெண்ணாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் நயன்தாராவின் சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளார். முதலாவதாக வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன் காதலில் விழுந்தார். அந்த சமயத்தில் அவர் அளவுக்கு அதிகமாக குடித்து, குடிக்க அடிமையாகி விட்டதாக சினிமா விமர்சகர் பயில்வான் கூறியுள்ளார்.
மேலும் இவர்களுக்கு திருமணம் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் பிரேக்கப் ஆகிவிட்டது. அதனால் நயன்தாரா மிகுந்த மன உளைச்சலில் அதிகமாக குடிக்க ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி இவருக்கு புகை பிடிக்கும் பழக்கமும் உள்ளது. இதைத் தொடர்ந்து நடன இயக்குனர் பிரபுதேவா உடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அதுவும் சில வருடங்களிலேயே முறிந்தது.
அதன் பிறகு தான் நயன்தாரா தனது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி கேரியரில் முன்னுக்கு வந்தார். அந்த சமயத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. அப்போதுதான் குடி மற்றும் புகைப்படத்திற்கு அடிமையாக இருந்த நயன்தாராவை கொஞ்சம் கொஞ்சமாக விக்னேஷ் சிவன் மாற்றி உள்ளார்.
அந்த சமயத்தில் தினமும் குடித்துக் கொண்டிருந்த நயன்தாரா வாரத்திற்கு ஒரு முறை மட்டும் குடிக்க அனுமதித்துள்ளார். அதன் பிறகு சுத்தமாகவே குடி, புகையை மறக்கடிக்கும் அளவுக்கு தனது அன்பு மற்றும் காதலால் நயன்தாராவை விக்னேஷ் சிவன் மாற்றி இருப்பதாக பயில்வான் கூறி உள்ளார்.