விஜய்யை மறைமுகமாக டேமேஜ் செய்யும் நெல்சன்.. சகுனியாக அடுத்தடுத்த படங்களுக்கு போட்ட பிள்ளையார் சுழி

Director Nelson:பொதுவாக ஒரு இயக்குனர் எந்த மாதிரியான வெற்றியை கொடுப்பார் என்பது ஓரளவுக்கு கணிக்க முடியும். ஆனால் இதுவரை நெல்சனின் படங்களை மட்டும் அந்த மாதிரி யூகிக்கவே முடியவில்லை. அதற்கு காரணம் அவர் எடுத்த முந்தைய படங்களில் கிடைத்த விமர்சனங்கள் தான்.

அந்த வகையில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து எடுத்த பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடமிருந்து படும் மொக்கை வாங்கியது. அத்துடன் இப்படம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது.

அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. அடுத்ததாக ரஜினி இவருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றதும் பலதரப்பட்ட கருத்துக்கள் எதிர்மறையாக கிடைத்தது. ஆனாலும் நெல்சன் மேல் முழு நம்பிக்கை வைத்து தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

அதுபோலவே ரஜினி கேட்ட மாதிரி ஜெயிலர் படம் நேற்று ரிலீஸ் ஆகி அட்டகாசமான வெற்றியை பார்த்து வருகிறது. இதனால் செம குஷிசியாக மாறிவிட்டார். இதற்கிடையில் சமீபத்தில் நெல்சன் கொடுத்த பேட்டி ஒன்றில் ஜெயிலர் படத்தை பற்றி பேசும் பொழுது ரஜினியை தூக்கி வைத்து பேசி இருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் விஜய்யை கொஞ்சம் டேமேஜ் செய்திருக்கிறார்.

அதாவது இவர் கூறியது ஒரு படத்தை எடுக்கும் பொழுது அந்த படத்தின் டைரக்டரை டிஸ்டர்ப் பண்ணாமல் இருந்தாலே போதும். சுயமாக அவர்களுடைய இஷ்டத்திற்கு யோசிக்க விட்டாலே அந்த படம் முக்கால்வாசி வெற்றி அடைந்து விடும். இந்த விஷயத்தில் ரஜினி ரொம்பவே கிரேட் என்று கூறியிருக்கிறார். இந்த மாதிரி ரஜினியை புகழ்ந்து இவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு பிள்ளையார் சுழியை போட்டு வருகிறார்

மேலும் இவர் கூறியதை பார்க்கும் பொழுது சூசகமாக விஜய்யை தான் குத்தி காட்டி டேமேஜ் பண்ணி பேசியிருக்கிறார் என்று பார்ப்பவர்கள் அனைவருக்கும் தெரிகிறது. ஏனென்றால் இவர் இதற்கு முன்னதாக எடுத்த படம் பீஸ்ட். இந்த படம் தான் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது. அதனால் இப்படம் எடுக்கும் போது தான் விஜய் இவருக்கு ஃப்ரீடம் கொடுக்கவில்லை என்பது இவர் கூறியதில் தெளிவாகப் புரிகிறது.