ஜெயிலர் படத்திற்கு நெல்சன் போட்ட கண்டிஷன்

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

வாரிசு படக்குழுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக தினமும் சூட்டிங் புகைப்படம் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. இதற்காக பல கட்டுப்பாடுகள் விதித்தும் எப்படியோ தினமும் ஒரு போட்டோ லீக் ஆகி வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தை பார்த்து முன்கூட்டியே சுதாகரித்துக் கொண்டது ஜெயிலர் படக்குழு.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி, சிவராஜ் குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் யாரும் மொபைல் பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் முக்கியமானவர்கள் வந்தால் கூட மொபைல் போன் பின்னாடி ஒரு மறைப்பு ஸ்டிக்கர் ஒட்டி விடுகின்றனர். இதனால் கேமரா கவர் செய்யப்படும். இந்த முன்னேற்பாடுகளால் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் வெளியாவதற்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு நெல்சன் ஜெயிலர் படத்திற்காக தாறுமாறாக யோசித்து தீயாய் வேலை செய்து வருகிறார். ஆனால் இந்த சின்ன விஷயம் கூட வாரிசு படக்குழுவிற்கு தெரியாத என்று பலரும் கலாய்த்து வருகின்றனர். ஆனால் அதற்குப் பின்னாடி ஒரு செய்தி கூறப்படுகிறது.

அதாவது வாரிசு படம் வேண்டும் என்று இந்த புகைப்படத்தை வெளியிடுவதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது படத்தின் ப்ரோமோஷனுகாக இது போன்ற புகைப்படத்தை லீக் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வாரிசு படக்குழு மீது வைக்கப்படுகிறது.