Actress Tamannah: தமிழில் முன்னணி இடத்தை பிடித்த தமன்னா சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜெயிலர் படத்தின் மூலம் திரும்பி வந்துள்ளார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கிறது.
இதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது ஜோராக நடைபெற்று வரும் நிலையில் தமன்னாவால் நெல்சன் படாத பாடு பட்டு வருகிறாராம். அதாவது சமீப காலமாகவே தமன்னா பற்றிய நெகட்டிவ் செய்திகள் தான் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது. பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் இவர் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படத்தில் நடித்துள்ளார்.
அதன் டீசர் சமீபத்தில் வெளிவந்தது. அதில் தமன்னாவின் உச்சகட்ட கவர்ச்சி கடும் விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியான ஜீ கர்தா வெப் தொடரிலும் அவர் படுமோசமாக நடித்திருந்தார். பலரையும் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு இருந்த அந்த காட்சிகளை பார்த்த பலரும் இப்போது அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் ரஜினி பட நடிகை ஐட்டம் நடிகையாக மாறிவிட்டார் என்ற செய்திகளும் தீயாக பரவி வருகிறது. இதனால் கடுப்பான ரஜினி இப்போது நெல்சனை கூப்பிட்டு லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம். ஏனென்றால் தமன்னாவை இப்படத்தில் நடிக்க வைக்க ஆலோசிக்கும்போதே சூப்பர் ஸ்டார் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் நெல்சன் தான் இந்த கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று கமிட் செய்திருக்கிறார். இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து யோசித்தும் கூட நெல்சன் இந்த விஷயத்தில் ரஜினியிடம் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவர் மீது ஏகப்பட்ட அதிருப்திகள் இருந்து வருகிறது.
இதில் தமன்னாவால் முளைத்திருக்கும் இந்த பிரச்சனையால் அவர் நொந்து நூடுல்ஸாகி விட்டாராம். எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா என்ற நிலையில் தமன்னா காட்டிய கவர்ச்சி நெல்சனுக்கு ஆப்பாக முடிந்திருக்கிறது. அந்த வகையில் ஜெயிலர் ரிலீஸ் ஆவதற்குள் இவர் இன்னும் என்னென்னவெல்லாம் பாடுபட போகிறாரோ என்று பலரும் உச்சு கொட்டி வருகின்றனர்.