எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றிய 2 இயக்குனர்கள்.. சூப்பர் ஸ்டாரை ஃபீனிக்ஸ் பறவையாக மாற்றிய நெல்சன்

Actor Rajini: சூப்பர் ஸ்டார், நெல்சன் கூட்டணியில் கடந்த வாரம் வெளிவந்த ஜெயிலர் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. முதல் நாளிலேயே உலக அளவில் 95 கோடி வரை வசூலித்த இப்படம் தற்போது நான்கு நாட்களிலேயே 300 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டியுள்ளது.

இதுதான் இப்போது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒருசேர ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் ரஜினி என்ற நடிகர் இனிமேல் அவ்வளவுதான் என்ற பேச்சு ஜெயிலர் படம் வெளிவருவதற்கு முன்பு வரை இருந்தது. இதற்கு வலுவான பல காரணங்கள் இருக்கிறது.

அதாவது சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வெளிவந்த எந்திரன் மாபெரும் வெற்றி பெற்றது. அதையடுத்து வெளிவந்த படங்கள் எதுவும் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. அதிலும் கடைசியாக வெளிவந்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் கடும் விமர்சனங்களை பெற்றது.

ஏற்கனவே ரஜினி இனிமேல் வெற்றி பெற முடியாது என பேசப்பட்டு வந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றிய கதையாக தர்பார் படத்தை கொடுத்து சோலியை முடித்தார். அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் சிறுத்தை சிவாவும் அண்ணாத்த படத்தை கொடுத்தார்.

இந்த இரண்டு படங்களும் தான் ரஜினிக்கு கடும் விமர்சனத்தை வாங்கி கொடுத்தது. இதனால் சினிமாவில் இருந்து விலகி விடலாம் என்ற முடிவுக்கு கூட அவர் வந்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் ஜெயிலர் அவருக்கான நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. அதற்கேற்றார் போல் வெறியுடன் காத்திருந்த நெல்சனும் ஜெயிலரை வைத்து தரமான சம்பவத்தை நிகழ்த்தி இருக்கிறார்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டாரை பீனிக்ஸ் பறவையாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. கடந்த வருடம் கமலுக்கு விக்ரம் படம் எப்படி மாஸாக அமைந்ததோ அதைவிட அதிகமாக ரஜினிக்கு இந்த வருடம் ஜெயிலர் இருக்கிறது. இதன் மூலம் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கும் ரஜினி அடுத்த சம்பவத்திற்கும் தயாராகவே இருக்கிறார்.