Samantha: விவாகரத்திற்கு பிறகு சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு அமைதியாக தான் இருக்கிறார்கள்.
ஆனால் இவர்களுடைய விவாகரத்து அலை சமூக வலைத்தளங்களில் ஓய்ந்தபாடில்லை. நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா உடன் திருமணம் ஆகிவிட்டது.
சமந்தா பண்ண டார்ச்சர்
அதே நேரத்தில் சமந்தா மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அதே நேரத்தில் இந்த நொடி வரை இந்த விவாகரத்திற்கு யார் காரணமாக இருப்பார்கள் என்பதற்கான தேடலும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் திருமணமான புதிதில் கொடுத்த பேட்டிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
அதில் சமந்தா பகிர்ந்து இருக்கும் விஷயங்கள், மற்றும் நாக சைதன்யா பேசும் விஷயங்களை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி சமந்தா தரப்பில் இருந்து நாக சைதன்யாவுக்கு காதல் டார்ச்சர் அதிகமாக இருந்திருக்கிறது.
எப்படிப்பட்ட மனிதர்களுக்கும் தனிமனித சுதந்திரம் என்பது ரொம்ப முக்கியம். அது நாக சைதன்யாவுக்கு கிடைக்காதது தான் இவர்களுக்குள் இருந்த பிரச்சனை என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.