Samantha: நடிகை சமந்தா காதல் வயப்பட்டு இருப்பதாக கடந்த சில தினங்களாகவே நிறைய செய்திகளை பார்த்திருப்போம்.
அவர் நடித்த தி ஃபேமிலி மேன் படத்தின் இயக்குனரை தான் காதலிக்கிறார் என்று கூட சொல்லப்படுகிறது.
நாக சைதன்யா இரண்டாம் திருமணத்திற்கு பிறகு சமந்தாவும் இது போன்ற ஒரு நல்ல வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தான் அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
வைரலாகும் இன்ஸ்ட்டா போஸ்ட்
விவாகரத்திற்கு பிறகு சமந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ரசிகர்களுக்கு அவர் மீது கொஞ்சம் அதிகமாகவே சிம்பதி ஏற்பட்டுவிட்டது.
மேலும் அவர் நாக சைதன்யாவை இன்னும் மறக்கவில்லை என்று கூட பேசப்பட்டது. இந்த காதல் செய்தி எல்லாம் கூட வதந்தியாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ஒரு வேலை மீண்டும் காதலில் விழுந்து விட்டாரா என்று யோசிக்க வைக்கிறது.
பிரபல அமெரிக்க பாடகர் செலினா கோம்ஸ் பாடிய Scared o loving you என்ற பாடலின் வரிகளை சமந்தா குறிப்பிட்டு இருக்கிறார்.
என்னுடைய கைகளை இறுகப்பற்றிக் கொள்வாயா, நான் எல்லாவற்றையும் இழந்தாலும் நீ என்னுடன் கூட இருப்பாயா, அவர்கள் என்னைப் பற்றி பொய் சொன்னால் என்னை திருப்பி அனுப்பி விடாதே என்று எழுதப்பட்டிருக்கிறது. இதனால் தான் ரசிகர்களுக்கு மீண்டும் சந்தேகம் வந்திருக்கிறது.
