மதராஸிக்கு பின் இணையும் கூட்டணி.. புது அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்  

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்கும் தனி காப்ப்ஷன் வைத்திருப்பவர் வெங்கட் பிரபு. மங்காத்தாவில் “A Venkat Prabhu Game” எனவும், சென்னை 600028ல் “A Venkat Prabhu Party” எனவும் ரசிகர்களை கவர்ந்தார். அதனால் அவரது caption-க்கு எப்போதுமே பெரிய எதிர்பார்ப்பு உண்டு.

கேம், பார்ட்டிக்கு அடுத்ததாக இப்போது “A Venkat Prabhu Rocket” என்கிற புதிய caption ல் களமிறங்குகிறார் வெங்கட் பிரபு. ராக்கெட் என்பது வேகம், புது ஆற்றல், எதிர்கால கற்பனை என்பதைக் குறிக்கிறது. அதனால் சைஃபை படத்துக்கு இது சரியான title caption என்று ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கிய விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில், சிவகார்த்திகேயன் முக்கியமான கேமியோ வேடத்தில் தோன்றியிருந்தார். மேலும் சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கிறார் வெங்கட் பிரபு. படத்திற்கான ஸ்கிரிப்ட் முழுவதும் ரெடி என்று சமீபத்திய ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த படம் முற்றிலும் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்தக் கதையில் முற்றிலும் புதிய லுக் மற்றும் அவதாரத்தில் SK-வை பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா வழங்குகிறார். வெங்கட் பிரபுவுடன் யுவனின் கூட்டணி எப்போதும் ஹிட்டானது இப்போதும் அதே தரத்தை எதிர்பார்க்கலாம். டெக்னிக்கலாக வும் ப்ராஜெக்ட் மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது.

கேம், “பார்ட்டிக்கு அடுத்ததாக “ராக்கெட்” என்கிற caption-ஐ கொண்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளார் வெங்கட் பிரபு. சிவகார்த்திகேயன் இணையும் இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் படம் ஏற்கெனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபரில் தொடங்கும் இந்த “ராக்கெட்” பறப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.