அஜித் இல்ல, சிவகார்த்திகேயனும் இல்ல.. அடுத்த ஹீரோவை வில்லங்கமான டைட்டிலுடன் உறுதி செய்த விக்கி

துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவார் என சொல்லப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவரை கழட்டி விட்டு தற்போது மகிழ் திருமேனி அந்த படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் யாருடன் இணைய இருக்கிறார் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  

விக்னேஷ் இடம் கதை கேட்ட சிவகார்த்திகேயனுக்கு அந்த கதை மிகவும் பிடித்துப் போனது. ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது. எப்படியாவது அந்த படத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என நினைத்த விக்னேஷ் சிவன் உடன் பிரதீப் ரங்கநாதன் இணைந்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காதல் களத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. 

ஆனால் படத்திற்கு வில்லங்கமான டைட்டிலை வைத்திருக்கின்றனர். படத்திற்கு எல்ஐசி (லவ் கார்ப்பரேஷன் இன்சூரன்ஸ்) (Love Corporation Insurance) எனவும் பெயரிட்டுள்ளனர். ஏற்கனவே விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரையுமே காதலிப்பதாகவும் இருவருமே வேண்டும் என்று அடம் பிடிப்பது போல் எடுத்து பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

அதேபோன்று இந்த படத்திலும் காதலுக்கு இன்சூரன்ஸ் வேண்டும் அதாவது காதலிப்பவர்களுக்கும் பாதுகாப்பு வேண்டும். ஒரு வேலை காதலர்களில் ஒருவர் கழட்டிவிட்டாலும் ஆப்ஷனல் வைத்துக் கொள்வது தப்பல்ல என்பதை இந்த படத்தில் காட்டப்போகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விக்னேஷ் சிவன் பிராக்டிக்கலா படம் எடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி வில்லங்கத்தனமாக யோசித்து கதை எழுதி இருப்பார் போல் தெரிகிறது. ஏனென்றால் படத்தின் டைட்டில் லவ் கார்ப்பரேஷன் இன்சூரன்ஸ் என்று இருப்பதால், ஒருத்தருக்கு ஒருத்தி என்பதெல்லாம் மலையேறிப் போச்சு. காதலுக்கும் இன்சூரன்ஸ் வேண்டும் என்பதை விக்னேஷ் சிவன் இந்த படத்தில் சொல்லப் போகிறார்.

ஏற்கனவே லவ் டுடே படத்தில் எதார்த்தமாக நடித்து இளசுகளை கவர்ந்த பிரதீப் ரங்கநாதனும் விக்னேஷ் சிவனின் கதைக்கு பொருத்தமான ஆள்தான். ஆகையால் இவர்கள் இருவரும் சேர்ந்து எல்ஐசி படத்தில் காதலை வைத்து லூட்டி அடிக்க போகின்றனர். மேலும் இந்த படத்தை உலகநாயகன் கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் 45 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது.