முதல் நாள் படப்பிடிப்பில் மிரள விட்ட லோகேஷ்.. தளபதி 67 படக்குழுவை அண்ணாந்து பார்த்த விஜய்

தளபதி விஜய் வாரிசு படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 படத்தில் பணியாற்றுகிறார். அதாவது வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான பிரமோஷன் வேலைகள் படுஜோராக நடந்து வருகிறது.

இந்த சூழலில் தளபதி 67 படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட்டிங் நடந்து வருகிறதாம். இதில் உலகில் மிகச்சிறந்த உபகரணங்களை லோகேஷ் பயன்படுத்த உள்ளாராம். அதுவும் லோக்கேஷின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது தொழில்நுட்ப ரீதியாக இந்த படம் 100 மடங்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

இவ்வாறு லோகேஷ் தன்னுடைய பட வேலைகளில் ஒவ்வொரு வேலையையும் மிகுந்த மெனக்கடலுடன் செய்து வருகிறார். ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் துப்பாக்கியை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு இருந்தார். அதற்கு கிடைத்த பலனாக படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இப்போது தளபதி 67 படப்பிடிப்பு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணிக்கு முடிந்தது. இதில் தளபதி விஜய் காலை 7 மணிக்கு செட்டுக்கு வந்தாராம். மேலும் மாலை 6.10 மணிக்கு செட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் வீடியோ ஒன்றை தயார் நிலையில் உள்ளது.

ஆனால் இப்போது தளபதி 67 படத்தின் வீடியோவை வெளியிட்டால் வாரிசு படத்திற்கு இடையூறாக இருக்கும் என்று வம்சி கேட்டுக் கொண்டதால் லோகேஷ் அந்த வீடியோவை வெளியிடாமல் வைத்துள்ளார். வாரிசு படம் வெளியான பிறகு தளபதி 67 படத்திற்கான வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

அதுமட்டும்இன்றி இப்போது வாரிசு படத்தை காட்டிலும் தளபதி 67 படத்தின் மீது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் ஏற்கனவே விஜய், லோகேஷ் கூட்டணியில் உருவான மாஸ்டர் படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இவருடைய அடுத்த படமான விக்ரம் படமும் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்ததால் தளபதி 67 படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

 தளபதி 67 படத்திற்கு டெஸ்ட் ஷூட்டிங் நடத்து லோகேஷ்

lokesh
lokesh