கங்குவாவுக்கு குவியும் எதிர்ப்பு.. சூர்யா குடும்பத்தின் மீது ரசிகர்களுக்கு அப்படி என்ன வெறுப்பு?

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான படம் கங்குவா. சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கருணாஸ், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார்.

உலகம் முழுவதும் நவம்பர் 14 ஆம் தேதியான நேற்று ரிலீஸாகி பெரும் வரவேற்பு பெரும் என் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இப்பட புரமோசனில் கலந்துகொண்ட, சிவா, சூர்யா, ஞானவேல் ராஜா ஆகியோர் ரூ.2000 கோடி வசூலிக்கும், இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் பான் இந்தியா படமாக ஹிட்டடிக்கும் என பேசினர். ஆனால் படக்குழுவினர் பேசிய மாதிரி படத்தில் எதுவும் இல்லை என என கமெண்ட்களும், இப்படத்தைப் பார்த்த ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

சினிமா விமர்சகர்கள் ஒருபடி மேலே போய், இப்படம் ஹாலிவுட் படங்களின் தழுவல்தான் இப்படம். தியேட்டரில் அமர்ந்து இப்படத்தைப் பார்க்க முடியவில்லை. ஒரே இரைச்சல், காது வலி, தலை வலி ஏற்படுகிறது என்று கூறி கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இந்த படம் படக்குழு கூறியபடி ரூ.1000 கோடி, ரூ.2000 கோடி எல்லாம் வசூலிக்காது. இப்படத்தின் நடித்தால், சூர்யாவின் அடுத்த படத்துக்கு சம்பளம் இறங்காமலும் மார்க்கெட் பறிபோகாமலும் இருந்தால் சரி என்று கூறியிருந்தனர்.

இது சூர்யா ரசிகர்களுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக திட்டமிட்டே கங்குவா படத்தின் மீது கட்டம் கட்டி விமர்சித்து வருகிறார்கள் என்று இது மற்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் பார்க்கும் வேலை தான் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நல்ல விசயங்களை ஏன் ரசிகர்கள் கவனிக்கவில்லை – ஜோதிகா

இந்த நிலையில், நடிகை ஜோதிகா ‘’3 மணி நேர படத்தில் முதல் அரைமணி நேரம் மட்டுமே சற்று சரியில்லை. கங்குவா ஷோ முடியும் முன்பே இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வருவது அதிர்ச்சியளிக்கிறது. இப்படத்தில் இருக்கும் நல்ல விசயங்களை ஏன் ரசிகர்கள் கவனிக்கவில்லை’’ என ஜோதிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை ஜோதிகா எழுப்பியுள்ள கேள்வியும் நியாயமானது தான். அவர் சொன்னபடி தமிழ் சினிமாவில் புதிய முயற்சி, சூர்யாவின் உழைப்பு, சிறுத்தை சிவாவின் உழைப்பு இதெல்லாம் பாராட்டக் கூடியதுதான். ஹாலிவுட்டில் இதற்கென பல நூறுகோடிகள் செலவழிப்பர். தமிழில் அப்படி முடியாது. இருக்கும் பட்ஜெட்டில் இப்படத்தைக் கொண்டு சேர்க்க முயற்சித்துள்ளனர் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

சூர்யாவின் குடும்பத்தின் மீது வெறுப்பு ஏன்?

அதேசமயம், கங்குவா படத்தின் மீதான விமர்சனம் என்பது, இப்பட த்திற்கு எதிரான இல்லை, சூர்யா குடும்பத்தினர் மீதான வன்மத்தை தான் ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸின் போது எதிர்மறை விமர்சனமாக காட்டிவிட்டதாகவும், இதேபோல்தான் கார்த்தியின் ஜப்பான் படத்துக்கும் நடந்திருக்கலாம் எனவே படத்தை படமாகத்தான் தான் பார்க்கவேண்டும் எதோ செயலுக்காக வன்மமாக வெளிப்படுத்தக் கூடாது என கூறி வருகின்றனர்.

மேலும் எல்லா படத்திலும் ஏதோ சில குறைகள் இருக்கலாம். அதற்காக இத்தனை கோடி செலவில் படமெடுத்த அவர்களின் முயற்சியை குறைத்து மதிப்பிடக்கூடாது என கருத்துகள் கூறி வருகின்றனர்.

Leave a Comment