உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடும் கமல்.. பிக்பாஸுக்கு போட்ட பக்கா பிளான்!

தற்போது 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஏற்கனவே களத்தில் இறங்கி சிறப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மக்கள் நீதி மையத்தின் சார்பாக பிரச்சாரம் நடைபெறும் என்று கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் வீட்டிலேயே பிஸியாக இருந்ததால், கட்சி வேலைப்பாடுகளில் சரிவர ஈடுபட இயலவில்லை. தற்போது அனைத்து கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் தனது கட்சிக்காக கமல்ஹாசன் தற்போது தேர்தல் பிரச்சாரக் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இவரின் வருகையால் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தனது படப்பிடிப்புக்கான நேரம், பிக்பாஸிற்கான கால்ஷீட் இதற்கு மத்தியில் தற்போது இந்த தேர்தல் வேலைப்பாடுகள், இவை அனைத்தையும் சிறப்பாக செய்துள்ளார்.

ஏனென்றால் பிரச்சாரம் ஈடுபட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை சூடு படுத்தக்கூடிய பிக்பாஸ் ப்ரோமோகளும் வரிசையாக தடையின்றி வெளிவந்து கொண்டிருக்கிறது.

bb5-kamal
bb5-kamal

ஏனெனில் கமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய உடன், அனுதினமும் அவருடைய வீட்டில்தான் பிக்பாஸ் ப்ரோமோ நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறதாம்.

ஆகையால் ஊரக உள்ளாட்சி தேர்தலால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று அடுத்த ப்ரோமோகளை கமல்  தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் தெள்ளத்தெளிவாக தெரியவந்துள்ளது.