பொன்னியின் செல்வனை வளைத்துப் போட்ட ரெட் ஜெயன்ட்.. கூட்டணியில் இணையும் கியூட் நடிகை

Actor Jayam Ravi: பிரம்மாண்ட வரலாற்று காவியமாய் மணிரத்னம் இயக்கத்தில் மேற்கொண்ட பொன்னியின் செல்வன், வசூலில் சக்கை போடு போட்டது. இந்நிலையில் ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி மேற்கொள்ள போகும் படம் குறித்த தகவல்களை இத்தொகுப்பில் காணலாம்.

இக்கால காதல் காவியமாய் பார்க்கப்பட்ட படம் தான் 96. விஜய் சேதுபதி, திரிஷா மேற்கொண்ட ராமு ஜானு கதாபாத்திரம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தெறிக்கவிட்ட நிலையில், அதைத்தொடர்ந்து தனுஷ் மற்றும் நித்யாமேனன் இணைந்து வெளிவந்த திருச்சிற்றம்பலம் படமும் காதலர்களால் கொண்டாடப்பட்டது.

இவ்விரு படங்களில் மேற்கொண்ட காதல் காட்சிகள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகை ஆகாது. காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படங்கள் வெற்றி பெற்றதன் அடிப்படையில் தற்போது உதயநிதியின் மனைவியான கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் தான் ஜே ஆர் 33.

மேலும் இப்படத்தில் திருச்சிற்றம்பலம் படத்தின் தனுஷ் நாயகியான நித்யாமேனன், ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்க உள்ளாராம். இப்படத்தின் இசையமைப்பை ஏ ஆர் ரகுமான் மேற்கொள்ள போவதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக இணையும் இக்காதல் ஜோடியின் வரவேற்பு மக்களிடையே எவ்வாறு இருக்கும் என்பதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பின் அஸ்திவாரமாய் இன்று பூஜை போடப்பட்டது. வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை மேற்கொண்ட கிருத்திகா மேற்கொள்ளும் இப்படத்தை ரெட் ஜெயின்ட் தயாரிப்பை மேற்கொள்கிறது.

மேலும் இம்முறை வித்தியாசமான முயற்சியில் இவர் மேற்கொள்ளும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது. 96, திருச்சிற்றம்பலம் படத்திற்கு போட்டியாக எதிர்பார்க்கப்படும் இப்படம் மக்களின் விமர்சனங்களை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.