சீயான் விக்ரம், மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் நடித்து, சமீபத்தில் பார்வையாளர்களை கவர்ந்திருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆகி மூன்று வாரங்கள் கடந்தும் பாக்ஸ் ஆபிசில் ஆட்சி செய்து வருகிறது. இதற்கிடையில் விக்ரம் தன்னுடைய 61வது படத்திற்கான படப்பிடிப்புகளை கடப்பாவில் தொடங்கியுள்ளார்.
18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் கோலார் தங்க வயல் சுரங்கத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை பணிக்கு அமர்த்த தொடங்கிய காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் கதையை எடுக்கிறார் இயக்குனர் பா. ரஞ்சித்.
இந்த படத்தில் முதலில் விக்ரமுக்கு ஜோடியாக, விஜயின் வாரிசு படத்தில் நடித்து வரும் ராஷ்மிக மந்தனா நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் தேதி முரண்பாடு காரணாமாக ராஷ்மிகா நடிக்கவில்லை. பின்னர் Chiyaan 61 ல் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது இந்த படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது விக்ரமின் 61 வது படத்தில் பூ மற்றும் மரியான் திரைப்படத்தில் நடித்த பார்வதி திருவோடு நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பார்வதி இந்த படம் மூலம் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்புகிறார்.
மற்றுமொரு புதிய அப்டேட் என்னவென்றால் தூள், அருள், மஜா திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் பசுபதி இந்த படத்தில் நடிகர் விக்ரமுடன் நடிக்கிறார். இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் பசுபதி ஏற்கனவே சர்பட்டா பரம்பரை என்னும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
chiyaan 61 படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் புதிய அப்டேட்டுகள் பல வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.